தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் பயிற்சி பெருவோர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட “வள்ளுவர் இல்லம்” தங்கும் விடுதியினை திறந்து வைத்து, புத்தாக்கம் மற்றும் பற்றுச்சீட்டு திட்ட பயனாளிகளுக்கு திட்ட நிதிகளை குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் வழங்கினார் ….
தமிழ்நாடு குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில், பயிற்சி பெறுவோர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தங்கும் விடுதியின் துவக்க விழா, புத்தாக்கம் மற்றும் பட்றுச்சீட்டு திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பயனாளிகளுக்கு எழுபத்தொரு லட்சம் மதிப்பிலான நிதி ஒப்புதல் ஆணை வழங்கும் விழா மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா சின்னத்தின் அறிமுக விழா சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் நடைபெற்றது ….
இதில் குரு சிறு மற்றும்
நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் அவர்கள் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட தங்கும் விடுதியினை திறந்து வைத்து, எழுபத்தொரு லட்சம் மதிப்பிலான நிதி ஒப்புதல் ஆணையினை சீட்டு திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி, வெள்ளி விழா சின்னத்தை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார் ….
குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அரசு செயலாளர் முனைவர் அதுல் ஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குனர் அம்பலவாணன், உதவி இயக்குனர் பிரேம்குமார்,தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் ….
முன்னதாக விழாவில் கடந்த நிதி ஆண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் காபி டேபிள் புத்தகம்,தொழில் முனைவோர் மற்றும் புதுமை குறித்த, விரிவான கல்விசார் வழிகாட்டி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கான அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அறிக்கை வெளியிடப்பட்டன …
மேலும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் முத்தாக நிறுவனத்தில் பயிற்சி பெற்று வெற்றிகரமாக தொழில் முனைவோராக திகழும் பெண் தொழில் முனைவோர்களுக்கு பெண் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது ….


