சென்னை அடையார் எம் ஜி சாலையில் புதுப்பிக்கப்பட்ட யூனிமணி நிறுவனத்தின் தொடக்க விழாவில் யூனிமணி தமிழ்நாடு வடக்கு மண்டலத்தின் மேலாளர் திலீப் அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் …
புதிதாக புனரமைக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ள இந்தக் அடையாறு கிளையின் துவக்க விழாவில் காவேரி மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் ஸ்வாமிநாதன், அண்ணா பல்கலைக்கழகத்தின் இயக்குனர் மருத்துவர் பாஸ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி புதிய அலுவலகம் குறித்தான தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர் …
மேலும் இந்த துவக்க விழாவில் பிராந்திய மேலாளர் மகேஸ்வரன், அடையாறு கிளை மேலாளர் மணிகண்டன், ஐய்ட்டா மேலாளர் அரிகிருஷ்ணன், கார்ப்பரேட் மேலாளர் நவீன் ராஜ்,அந்நிய செலாவணி வணிக வளர்ச்சி மேலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட அந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள், ஊழியர்கள்,வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்…
முன்னதாக யூனிமணி நிறுவனத்தின் துவக்க விழாவை முன்னிட்டு, சந்தோஷ் நகர் அரசு தொடக்கப்பள்ளிக்கு தண்ணீர் குளிரூட்டி எந்திரம் மற்றும், பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தக பைகள் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டது…
புதிதாக இந்தப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள தங்களின் நிறுவனத்தில் தங்க நகை கடன்,வெளிநாட்டு பண பரிவர்த்தனை சுற்றுலா மற்றும் தங்கும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் வழங்கி வருவதாகவும், சென்னை அடையாறு எம் ஜி சாலையில் உள்ள பூர்விகா கடையின் மாடியில் தங்களின் இந்த புதிய கிளை தொடங்கப்பட்டு உள்ளதாகவும்,அடையாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் தங்களின் இந்த புதிய கிளையில் கிடைக்கும் சேவைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்வதாக யூனிமணி நிறுவனத்தின் அதிகாரிகள் துவக்க விழாவின் போது தெரிவித்தனர்