ஸ்ரீ சீதா லக்ஷ்மண அனுமந்த் சமேத ஸ்ரீ ராமர் சன்னதியின் கும்பாபிஷேக விழா

சென்னை புதுபெருங்களத்தூர் என் ஜி ஓ காலனியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணர் திருக்கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சீதா லக்ஷ்மண அனுமந்த் சமேத ஸ்ரீ ராமர் சன்னதியின் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது…

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்…

முன்னதாக திருக்கோயிலில் கோ பூஜை, விஷேச அர்ச்சனைகள் மற்றும் பல்வேறு திரவிய ஹோமங்கள், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது, பின்னர் மகா பூர்ணாஹூதி,யாத்ரா தானம் மேற்கொள்ளப்பட்டு வேத விற்பனர்கள் வேதங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது, மேலும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சன்னதியின மூலஸ்தானத்திற்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது…

பின்னர் ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு மகா தீப ஆராதனை காட்டப்பட்டது…

இதில் புதுபெருங்களத்தூர் என் ஜி ஓ காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டு ஸ்ரீ ராமபிரான் மற்றும் லஷ்மி நாராயணரின் அருளினை பெற்றுசென்றனர்…

பின்னர் ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் ஆலய விழா குழுவினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது…

மேலும் இந்த ராமர் சன்னதி கும்பாபிஷேக விழாவில் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாட்டாளர் ஜெயந்தி ரங்கராஜன்,ஆலயத்தின்தலைவர் செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள்,ஆலய உபயதாரர்கள்,என் ஜி ஓ காலனி குடியிருப்பு வாசிகள் மற்றும் அப்பகுதி வாழ் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *