ஸ்ரீ வித்தக விநாயகர் ஸ்ரீ சந்தோஷி மாதா ஆலயத்தின் கும்பாபிஷேக விழா
சென்னை புழுதிவாக்கம் அன்னை சத்யா நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வித்தக விநாயகர் ஸ்ரீ சந்தோஷி மாதா ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.. முன்னதாக திருக்கோவிலில் மகா கணபதி ஹோமம் ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் நவகிரக ஹோமம் நடைபெற்றது, பின்னர் மூன்று கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு பூர்ணாஹூதி யாத்ராதானம் மேற்கொள்ளப்பட்டது,பின்னர் கலச புறப்பாடு நடைபெற்று வேதாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க கலசங்களில் புனிதநீர் எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது……


