சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
  First   « Prev   2  3  4  5    Next »   Last
TAMILNADU NEWS     |     Apr 9, 2015

ஆந்திர அரசு பயங்கரவாதத்தை மோடி கண்டிக்காதது ஏன்?- ராமதாஸ்

  திருப்பதி துப்பாக்கிச் சூட்டில் தமிழர்கள் 20 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் கடைபிடிப்பது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த வனப்பகுதியில் அப்பாவித் தமிழர்கள் 20 பேரை ஆந்திர மாநில சிறப்புக் காவல்படையினர் கொடூரமான முறையில் படுகொலை செய்திருக்கின்றனர். இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக ஆந்திரக் காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையினர் கூறிய காரணங்கள் அனைத்தும் பொய் என்பது...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 9, 2015

நாகூர் அனிபா, சென்னையில் நேற்று இரவு காலமானார்: கருணாநிதி கண்ணீர்..

  தி.மு.க. பிரமுகரும், பிரபல இஸ்லாமிய பாடகருமான நாகூர் அனிபா, சென்னையில் நேற்று இரவு 9 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 96. அவர் மறைவுற்ற செய்தியறிந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி அதிர்ச்சி அடைந்தார். இரவில் அவரது வீட்டிற்கு சென்று நாகூர் அனிபா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது கண்ணீர் மல்க கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது: எனது ஆருயிர் நண்பரும், எனது இளமை காலத்தில் இருந்து இந்த இயக்கத்திலே என்னோடு சேர்ந்து வளர்ந்தவருமான என்னுடைய அன்புக்குரிய சகோதரர் இசைமுரசு அனிபா நம்மையெல்லாம் விட்டு பிரிந்து விட்டார்....
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 9, 2015

ஞானபீட விருது பெற்ற பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் மரணம்

  பிரபல தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தன், சென்னை கே.கே. நகர் நாகாத்தம்மன் கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு வயது 80. கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சில நாட்களுக்கு முன்னர் சிறுநீரக பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில், நேற்று இரவு எழுத்தாளர் ஜெயகாந்தன் மரணம் அடைந்தார். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதை பெற்ற 2வது தமிழ்...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 7, 2015

செம்மரக் கடத்தல் விவகாரம்: தமிழக - ஆந்திர அரசுகள் மீது கருணாநிதி..

  செம்மரக் கடத்தல் விவகாரத்தில் ஆந்திர போலீஸ் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, இப்பிரச்சினையில் இரு மாநில அரசுகள் மீதும் குறைகூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ஆந்திர மாநிலம், திருப்பதி வனப் பகுதியிலே, செம்மரம் வெட்டிய தொழிலாளர்கள் மீது ஆந்திரப் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் உட்பட இருபது பேர் பலியாகியுள்ளதாக வந்துள்ள செய்திகள் பெரிதும் வருத்தத்திற்குரியது. கடந்த பல மாதங்களாக இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற போதிலும் அது...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 7, 2015

சுட்டதற்குப் பதில் கைது செய்திருக்கலாமே... ஆந்திர அரசுக்கு ஓ.பி.எஸ்...

  ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்ட 20 தமிழர்களை அந்த மாநில போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து நம்பகமான விசாரணை நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- சேஷாச்சல வனப்பகுதியில் ஸ்ரீவாரிவெட்டு, ஈசகுண்டா பகுதிகளில் செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினர் 7-ம்...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 5, 2015

உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் -..

  தகுதித்தேர்வில் தேர்ச்சி தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் 1,093 உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகளில் 1,093 உதவி பேராசிரியர்களை நியமிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 28.9.2013 அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இக்காலிப்பணியிடங்கள் அனைத்தும் 2012-ம் ஆண்டுக்குரியவை ஆகும். 2009-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின்படி,...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 5, 2015

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது

  நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். நெல்லை வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வேளாண் துறையில் 7 டிரைவர்களை பணி நியமனம் செய்ததில், அரசியல் பிரமுகர்களின் நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாரி முத்துக்குமாரசாமி...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 4, 2015

தாலி அணிவதும், அணியாமல் இருப்பதும் பெண்களின் தனிப்பட்ட உரிமை:..

  தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேள்வி:- தாலி குறித்த சர்ச்சை பற்றி?. பதில்:- பிள்ளையாரை வணங்கவும் மாட்டேன், பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கவும் மாட்டேன் என்று பேரறிஞர் அண்ணா சொன்னதைப்போல, தாலி அணிவதும், அணியாமல் இருப்பதும், அணிந்த பிறகு அதை வேண்டாம் என்று கழற்றி வைத்து விடுவதும் என்பது அவரவர் விருப்பத்தையும், நம்பிக்கையையும், தனிப்பட்ட உரிமையையும் சார்ந்தது. கேள்வி:- நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மாநிலங்களவையில் பெரும்பான்மையில்லாமல் நிறைவேற்ற...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 3, 2015

தமிழக மீனவர்களின் கோரிக்கை நிராகரிப்பு: இலங்கைக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

  தமிழக மீனவர்களின் கோரிக்கை இலங்கை அதிபர் நிரகரித்தது கண்டனத்துக்குரியது என தமாகா கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடந்த தமாகா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் காசிலிங்கம் மகள் திருமணத்தில் பங்கேற்ற, தமாகா தலைவர் ஜிகேவாசன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "இந்திய - இலங்கை மீனவர்கள் 3-வது கட்ட பேச்சு வார்த்தையில், இலங்கை கடல் பகுதியில் ஆண்டிற்கு 83 நாட்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்களின் நியாயமான கோரிக்கையை இலங்கை அதிபர் சிறிசேனா நிரகரித்துள்ளார். இது...
Keep Reading

 
TAMILNADU NEWS     |     Apr 3, 2015

திண்டுக்கல்லில் பால்வேன் மீது கார் மோதி விபத்து, 9 பேர் பரிதாப பலி

  திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சேடபட்டி என்ற இடத்தில் அதிகாலை 1.30 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியானார்கள். நேற்று இரவு டிஎன்.34 ஆர்.0652 எண்ணுடைய பால் டேங்கர் லாரி முசிறியிலிருந்து 15 ஆயிரத்து 500 லிட்டர் பால் ஏற்றிக்கொண்டு கேரளாவில் உள்ள தனியார் பால் பண்ணைககு செம்பட்டி வழியாக வத்தலக்குண்டு நோக்கி சென்று கொண்டியிருந்தது. அப்போது கொடைக்கானலிலிருந்து ஒரு குவாலிஸ் காரில் பத்து பேர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளபட்டிக்கு சென்றனர். இவர்களது கார் செம்பட்டி அருகே வத்தலக்குண்டு மெயின்...
Keep Reading

 
  First   « Prev   2  3  4  5    Next »   Lastவிளம்பரம்