RISHS INTERNATIONAL SCHOOL 3'rd ANNUAL DAY 05-02-2019    |    Inaugural 64-team BOOST Chennaiyin FC Football Championship announced    |    Dr.Paul Dhinakaran's Family Wedding reception at Vanagaram    |    The 31 Plenary Assembly of the Conference of the Catholic Bishops of India    |    Champions of ALLEN Sharp Exam Felicitated in the SCORE ceremony    |    7Up And Actress Kajal Aggarwal Bring Ponneram to Chennai    |    TAPMA Plans Huge Demonstration on 13th Dec. for Withdrawal of Plastics Ban    |    ALLEN Career Institute launches study centre in Chennai    |    Ford Inaugurates Dhruvan Ford Sales and Service Facility in Chennai    |    Chartered Accountant Training Program by Education Department    |   
Total Visitors : site stats
  First   « Prev   3  4  5  6    Next »   Last
SPRITUAL NEWS     |     Jul 10, 2014

40 ஆண்டுகளுக்கு பிறகு திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் புதிய..

  திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. புதிய தேர் வெள்ளோட்டம் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவிலில் சத்தியமூர்த்தி பெருமாளுக்கு ஆடி மாதம் காப்பு கட்டி 10 நாள் திருவிழா நடைபெறும். ஆடி கடைசி அன்று சத்தியமூர்த்தி பெருமாள் தேரில் உலா வருவது வழக்கம். இத்தேர் பழுதடைந்து சுமார் 40 ஆண்டுகளாக தேர் ஓடாமல் ஆடி திருவிழா அன்று சத்தியமூர்த்தி பெருமாள் பல்லக்கில் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார்.தற்போது அரசு உதவியுடன் பல லட்சம்...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Jun 6, 2014

வசந்த உற்சவம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் துவங்கியது

  திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவம் சிறப்பு வாய்ந்தது. இந்த விழா நேற்று தொடங்கியது. வரும் 13ம் தேதி வரை நடக்கிறது. உற்சவ முதல் நாளான நேற்று மாலை 5 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு வசந்த மண்டபம் வந்தடைந்தார். அலங்கரிக்கப்பட்ட நீராழி மண்டபத்தில் இரவு 8.30 மணி வரை சேவை சாதித்தார். 8.30 மணிக்கு நம்பெருமாளுக்கு சூர்ணாபிஷேகம் நடந்தது. வசந்த உற்சவ மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம்...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     May 18, 2014

சித்திரை திருவிழா முடிந்து கோயில் மலைக்கு திரும்பிய கள்ளழகர்.

  10 நாள் சித்திரை திருவிழா முடிந்து அழகர் கோயில் மலைக்கு திரும்பினார் கள்ளழகர். அழகர்கோயிலில் குழுமியிருந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் மலர்தூவி வரவேற்பு அளித்தனர். தங்கை மீனாட்சி திருமணத்தை காண கள்ளழகர் வேடம் பூண்டு 12ந் தேதி புறப்பட்டார். மதுரை தல்லாகுளத்தில் எதிர்சேவைக்குபின் 14-ல் வைகை ஆற்றில் அழகர் இறங்கினார்.
Keep Reading

 
SPRITUAL NEWS     |     May 15, 2014

சபரிமலை அய்யப்பன் கோவிலில் தடையை மீறி 2 சிறுமிகள் தரிசனம்-பரிகார பூஜை

  பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதில் மிக முக்கியமானது 10 வயதுக்கு மேற்பட்ட, 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையாகும். இந்த விதிமுறைகளை அறியாமலோ இதை பின்பற்றாமலோ சபரிமலை வரும் பெண் பக்தர்கள் மலையடிவாரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள்....
Keep Reading

 
SPRITUAL NEWS     |     May 14, 2014

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்

  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து, சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வந்தாலும், சித்திரைத் திருவிழா வரலாற்று பெருமை பெற்றதாகும். இந்த ஆண்டு சிறப்பு மிக்க சித்திரைத் திருவிழா கடந்த 1ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைதொடர்ந்து தினமும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசப்பெருமான் பிரியாவிடையுடனும் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்தனர்....
Keep Reading

 
SPRITUAL NEWS     |     May 13, 2014

மதுரையில் கள்ளழகருக்கு எதிர்சேவை

  அழகர்கோயிலில் இருந்து கண்டாங்கி பட்டுடன் தங்கபல்லக்கில் கள்ளழகர் மதுரை வந்தார். வழிநெடுகிலும் இருந்து 463 மண்டக படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். சித்திரை முத்திரை பாதிக்கும் அழகர் இறங்கும் வைபம் நாளை நடைபெறுகிறது. காலை 6.30 மணியளவில் தங்க குதிரையில் கள்ளழகர் வைகையில் எழுந்தருளுகிறார். கள்ளழகருக்கு அணிவிக்க ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பரிவட்டம் மதுரைக்கு வந்ததுள்ளது. மதுரை வந்த கள்ளழகருக்கு மூன்றுமாவாடி மற்றும் புதூரில் எதிர்சேவை நடைபெறுகிறது. இன்று மாலை...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     May 12, 2014

மதுரை மாசி வீதிகளில் வலம் வந்த மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம்

  மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று மீனாட்சி தேரோட்டம் நடந்தது. அலங்கார தேரில் எழுந்தருளி மாசி வீதிகளில் மீனாட்சியும், சொக்கநாதரும் வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதுரையில் உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், திக் விஜயம் ஆகியவை நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வடக்கு ஆடி வீதியில் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. இந்த...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Apr 18, 2014

கீழ்பாக்கம் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

  சென்னை கீழ்ப்பாக்கம் செகரட்டரியெட் காலனியில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று 18.04.2014 வெள்ளியன்று காலை சிறப்பாக நடைபெற்றது. பரத்வாஜ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் பரம்பரை அறக்காவலர் நவநீதகிருஷ்ணண் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Apr 18, 2014

ஸ்ரீ விஜய கணபதி-ஸ்ரீ நாராயணபெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்

  சென்னை குரோம்பேட்டை புருஷோத்தமன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ விஜய கணபதி-ஸ்ரீ நாராயணபெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேகம் 13.04.2014 ஞாயிறன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Apr 18, 2014

சூளைமேடு சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

  சென்னை சூளைமேடு அவ்வை நகரில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அய்யப்ப சுவாமி ஆசியுடன் இன்று (18.04.2014) காலை சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு அம்மன் அருளாசியை பெற்று மகிழ்ந்தனர்
Keep Reading

 
  First   « Prev   3  4  5  6    Next »   Last



விளம்பரம்