சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
  First   « Prev   1  2  3  4    Next »   Last
SPRITUAL NEWS     |     Jan 14, 2015

சபரிமலையில் மகரஜோதி தெரிந்தது : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

  சபரிமலை பொன்னம்பலமேட்டில் இரவு 6.55 மணியளவில் மகரஜோதி தெரிந்தது. சரண கோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் மகரஜோதி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. அப்போது பொன்னம்பல மேட்டில் 6.55 மணியளவில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தந்தார். மகரவிளக்கு பூஜையை ஒட்டி சபரிமலை முழுவதும் விழாக்கோலம் பூண்டது. மகரஜோதியை தரிசிப்பதற்காக சபரிமலையில் பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர். மகர ஜோதியை சன்னிதானம், பாண்டிதாவாலம், புல்மேடு, சரங்கொத்தி, மரக்கூடம், அட்டத்தோடு, உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள்...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Jan 14, 2015

23ம் தேதி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தை தெப்ப உற்சவ விழா

  மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்ப உற்சவ விழா வரும் 23ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் (பிப்ரவரி) 3ம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர் நா. நடராஜன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சொக்கநாத பெருமானே பல்வேறு அவதாரங்களை எடுத்து 64 திருவிளையாடல்களை புரிந்து புராதான தலமாகும். இத்திருக்கோயிலில் தை தெப்ப உற்சவ விழா வரும் 23ம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Jan 9, 2015

சென்னை, காஞ்சிபுரம் உள்பட திருப்பதி தேவஸ்தான தகவல் மையங்களில் இ-தர்ஷன்..

  திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் இலவச தரிசனம், திவ்ய தரிசனம், விஐபி தரிசனம், ரூ.300க்கான சிறப்பு தரிசனம் ஆகியவற்றில் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது ரூ.300க்கான சிறப்பு தரிசன டிக்கெட், ஆன்லைன் மூலம் விற்கப்படுகிறது. இந்த டிக்கெட்டுகளை படிக்காத மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் கிராமபுறத்தில் உள்ள பக்தர்களும் ஆன்லைன் மூலம் தரிசன...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Jan 8, 2015

சிருங்கேரி மடத்தின் 37-வது பீடாதிபதியாக ஸ்ரீ குப்ப வெங்கடேஸ்வர பிரசாத‌..

  கர்நாடக மாநிலம் சிருங்கேரி யில் உள்ள ஸ்ரீ சாரதா பீடத்தின் 37-வது பீடாதிபதியாக ஆந்திராவை சேர்ந்த  குப்ப வெங்கடேஸ்வர பிரசாத‌ ஷ‌ர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சம்ஸ்கிருதத்தையும் தர்க்க சாஸ்த்திரத்தையும் கற்றுத் தேர்ந்தவர் ஆவார். இது தொடர்பாக சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலம் சிருங் கேரியில் அமைந்துள்ள ஸ்ரீ சாரதா பீடத்தின் 36-வது பீடாதிபதியாக ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் உள்ளார். இவர் கடந்த 1989-ம் ஆண்டு பீடாதிபதியாக பொறுப்பேற்றார். தனது 25 ஆண்டு பயணத் தில்...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Jan 1, 2015

வைகுண்ட ஏகாதசி திருநாள் புத்தாண்டு தினத்தில் பெருமாள் ஆலயங்களில்..

  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்வேறு வைணவத் திருத்தலங்களில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதேபோல் திருப்பதி உள்ளிட்ட வைணவ திருத்தலங்கள் அனைத்திலும் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் திரண்டனர். பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் ஏகாதசி விழா கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சியளித்தார். முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வியாழக்கிழமை...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Dec 22, 2014

ஜன.1 வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல்பத்து உற்சவம்..

  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு திருமொழித் திருநாள் எனும் பகல்பத்து உற்சவம் இன்று அதிகாலை தொடங்கியது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயம். இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பகல் பத்து, ராப்பத்து என, தொடர்ந்து, 21 நாள் திருவிழா நடக்கும். நடப்பாண்டு ஏகாதசி பெருவிழா இன்று அதிகாலை தொடங்கியது. இதையொட்டி, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சிம்மகதியில் காலை 6.45 மணிக்கு புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் 7.30...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Dec 16, 2014

விராலிமலை ஸ்ரீமெய்க்கண்ணுடையால் கோயிலில் 1501- மாகாகுத்துவிளக்கு பூஜை

  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு ஸ்ரீமெய்க்கண்ணுடையால் கோயிலில் மார்கழி மாதம் முதல் நாளான செவ்வாய்க்கிழமை 1501- மகாகுத்துவிளக்கு பூஜை அதிகாலை தொடங்கி நடைபெற்றது. விராலிமலை அருள்மிகு ஸ்ரீமெய்க்கண்ணுடையால் கோயில் வரலாற்று புகழ் பெற்ற கோயிலாகும், இக்கோயிலில் வருடம் தோறும் மார்கழி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு 1501 மகாகுத்துவிளக்கு பூஜை தொடங்கி மாதம் முழுவதும் செவ்வாய்- வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் அருள்மிகு ஸ்ரீமெய்க்கண்ணுடையால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன்...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Dec 15, 2014

நாளை சனிப்பெயர்ச்சி: சனீஸ்வர பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக..

  ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வதே பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. எல்லா கிரகங்களும் பெயர்ச்சி அடைகிறது என்றாலும் சனிப்பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சியைத்தான் நாம் முக்கியமானதாகக் கருதுகிறோம். இரண்டு பெயர்ச்சிக்கும் கோயில்களுக்கு சென்று வழிபட்டு நம் ராசிக்குரிய பலன்களை எதிர்பார்த்து அதன்படி நடந்து கொள்கிறோம். சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர மொத்தம் 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால் அந்த முப்பது ஆண்டுகளையும் 12 ராசிகளுக்கும் சராசரியாக பிரித்தால் இரண்டரை ஆண்டுகள் வரும்....
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Dec 6, 2014

திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது

  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையட்டி கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் 25 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு தீப தரிசனம் செய்தனர். உலகில் உள்ள சிவாலங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பஞ்ச பூத தளங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில். இங்கு கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். மலையே சிவனாக வணங்கப்படும் திருவண்ணாமலையில் இந்த...
Keep Reading

 
SPRITUAL NEWS     |     Dec 3, 2014

திருவண்ணாமலை: இன்று மலை உச்சிக்கு மகாதீப கொப்பரை கொண்டு சென்றனர்

  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான மலை உச்சியில் மகாதீபம் ஏற்றும் விழா வருகிற 5ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதற்காக இன்று காலை மகாதீப கொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். கோவிலில் கிளிகோபுரம் அருகே உள்ள நந்திசிலை அருகே வேதமந்திரங்கள் முழங்க மகாதீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்தனர். கோ பூஜையும் செய்யப்பட்டது. கொப்பரைக்கு கோவில் யானைருக்கு ஆசி வழங்கியது. இதனையடுத்து கொப்பரை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது....
Keep Reading

 
  First   « Prev   1  2  3  4    Next »   Lastவிளம்பரம்