Bonfiglioli Sets Up a New Facility in Chennai    |    United India Insurance - MEGA INSURANCE ADVISORS MEET AT CHENNAI ON 28/08/2018    |    Vishal 3R Lab innaugurated by Seema Agarwal IPS    |    CII and Grundfos Inaugurate GangaiAmman Koil Kulam (Tank)    |    TUTUCORIN CONTRACTORS ASSOCIATION PRESS MEET REGARDING STERILITE    |    சிறந்த திட்டமிடல் இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும்: வருமான வரித் துறை ஆணையர்    |    IndoStar Capital Finance Limited Offer opens on May 9, 2018    |    Catalyst PR - Receive ISO Certification    |    UBM India announces the maiden edition of The Chennai Jewellery and Gem Fair    |    Vibrant Tamilnadu Food Expo 12-15 August @ Madurai    |   
Total Visitors : site stats
  First   « Prev   3  4  5  6    Next »   Last
POLITICS NEWS     |     Jan 12, 2015

பரங்கிமலைபல்லாவரம் கண்டோன்மெண்ட் தேர்தல் அ.தி.மு.க. 4 வார்டுகளில் வெற்றி

  பரங்கிமலைபல்லாவரம் கண்டோன்மெண்ட் தேர்தல் நேற்று நடைபெற்றது. 7 வார்டுகளில் 94 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஓட்டுப்பதிவின் போது கலவரம் ஏற்பட்டது. அ.தி.மு.க.தி.மு.க. தொண்டர்களிடையே நடந்த மோதலில் தி.மு.க. வேட்பாளர் கோபிநாத் மண்டை உடைந்தது. காலை முதல் மாலை வரை ஓட்டுப்பதிவு முடியும் வரையில் இந்த மோதல் போக்கு நீடித்தது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்த போதிலும் கலவரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பரங்கிமலைபல்லாவரம் மேற்கு கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள்...
Keep Reading

 
POLITICS NEWS     |     Jan 10, 2015

ராஜபக்ச தோல்வி: தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு

  இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து தமிழக அரசியல் கட்சிகள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளன. கருணாநிதி, தலைவர், தி.மு.க வெற்றி பெற்றவரும், தோல்வி அடைந்தவரும் கடந்த காலத்தில் நடைபெற்ற செயல்களுக்கு யார் பொறுப்பு என்பதை எண்ணிப் பார்த்து இனிமேலாவது திருத்திக் கொள்ள வேண்டும். போர்க் குற்றங்களுக்காக ராஜபக்சவை விசாரிக்க வேண்டும் என்பது தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே வலியுறுத்தியது அப்படியே இருக்கிறது. பழ.நெடுமாறன், தலைவர், தமிழர் தேசிய முன்னணி இலங்கைத் தேர்தலில் ராஜபக்ச அடைந்துள்ள...
Keep Reading

 
POLITICS NEWS     |     Jan 9, 2015

கன்டோன்மென்ட் தேர்தல் அதிமுக, திமுக பிரசாரம்

  பரங்கிமலை கன்டோன்மென்ட் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இரண்டாவது வார்டு அதிமுக வேட்பாளர் தேன்ராஜாவை ஆதரித்து அமைச்சர் சின்னையா வாக்கு சேகரித்தார். எம்.எல்.ஏ.,க்கள் கே.பி.கந்தன், வி.என்.பி.வெங்கட்ராமன் உள்பட பலர் உடன் சென்றனர். அதே வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களான மாசீர்முகமதி, கோபாலகிருஷ்ணனும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 5வது வார்டு அதிமுக வேட்பாளர் ஆனந்த்குமாரும் வாக்கு சேகரித்தார். எம்.எல்.ஏ. வெங்கட்ராமன், தேர்தல் பொறுப்பாளர்கள் வைரமுத்து, கஜேந்திரன், முருகன்...
Keep Reading

 
POLITICS NEWS     |     Jan 9, 2015

அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கவர்னரிடம் புகார் மனு: தி.மு.க. பொதுக்குழு..

  தி.மு.க. பொதுகுழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: * பாராட்டுக்குரிய தலைவர் கலைஞரையும், அவரோடு கழகத்தை வழி நடத்திட உதவியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியரையும் பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் இப்பொதுக்குழு வாழ்த்தி வரவேற்கின்றது. * நடந்து முடிந்த 16வது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, அரசியல் சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்டு, பிரதமர் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி அரசு, பொறுப்புக்கு வந்தவுடன் தொடக்கத்தில் நாம் வரவேற்கத்தக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை...
Keep Reading

 
POLITICS NEWS     |     Jan 9, 2015

கருணாநிதி 11 முறையாக தி.மு.க தலைவராக தேர்வு

  தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்தது. இதில் பங்கேற்க தி.மு.க. தலைவர் கருணாநிதி காலை 9 மணிக்கு வந்தார். பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் பொதுக்குழு கூட்டத்துக்கு வந்தனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து 2500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப் பினர்களும் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.இதற்காக தேர்தல் ஆணை யராக அமைப்பு செயலாளர் சற்குணபாண்டியன் நிய மிக்கப்பட்டார்....
Keep Reading

 
POLITICS NEWS     |     Jan 7, 2015

தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு இன்று மனுதாக்கல்

  தி.மு.க.வின் 14வது பொதுத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட 65 மாவட்டங்களில் 60 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். சேலம், ஈரோடு மாவட்ட செயலாளர்கள் தேர்தல் மட்டும் நடைபெற வேண்டியுள்ளது. கட்சியில் 97 சதவீத அளவிற்கு தேர்தல் நடந்து முடிந்து விட்டதால் வருகிற 9ந் தேதி காலை 9 மணிக்கு பொதுக்குழு கூட்டப்படுகிறது. புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு மற்ற மாநில...
Keep Reading

 
POLITICS NEWS     |     Jan 5, 2015

7ம் தேதி செயற்குழுக் கூட்டம், மறக்காம வந்துருங்க, ஆனா "கேப்டனுக்கு" மாலை..

  தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: தே.மு.க.வின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம் வருகின்ற 7ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணியளவில் கோயம்புத்தூர், ஸ்ரீலட்சுமி நாராயணா மஹாலில் நடைபெற உள்ளது. தே.மு.தி.க. தலைவ ர் விஜயகாந்த் கலந்து கொண்டு கழகத்தின் ஆக்கப்பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார். இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக...
Keep Reading

 
POLITICS NEWS     |     Jan 4, 2015

அண்ணா தி.மு.க. 3ம் கட்ட அமைப்பு தேர்தல் துவங்கியது

  ஜெயலலிதா அறிவித்தபடி அண்ணா தி.மு.க. 3ம் கட்ட அமைப்பு தேர்தல் இன்று துவங்கியது. அனைத்து இடங்களிலும் அண்ணா தி.மு.க. தொண்டர்கள் உற்சாகத்துடன் வந்திருந்து வேட்புமனுக்களை வாங்கினார்கள். ஒவ்வொரு இடத்திலும் தொண்டர்கள் குவிந்தனர். அண்ணா தி.மு.க. அமைப்பு தேர்தல் 5 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு அண்ணா தி.மு.க. அமைப்பு தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 14 கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 2 கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டது. இன்று 3ம் கட்ட தேர்தல் துவங்கியது. இந்த தேர்தல் 8ந்தேதி வரை நடைபெறுகிறது....
Keep Reading

 
POLITICS NEWS     |     Jan 4, 2015

பொருளாளர் பதவியை ராஜினாமா செய்ய வில்லை: மு.க.ஸ்டாலின் பேட்டி

  தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் தேர்ந்தெடுக் கப்பட்டனர். தொடர்ந்து மாவட்டச் செயளாலர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஏற்கனவே இந்த பொறுப்புகளில் கருணாநிதி, அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் இருந்து வருகிறார்கள். இவர்களை அந்த பொறுப்புகளுக்கு மீண்டும் ஒரு மனதாக தேர்வு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளரை தேர்வு செய்வதற்காக வருகிற 9ந்தேதி தி.மு.க....
Keep Reading

 
POLITICS NEWS     |     Jan 4, 2015

"ராஜினாமா" பரபரப்பு பின்னணியில்... கருணாநிதியைச் சந்தித்தார் ஸ்டாலின் !

  சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின். திமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக திமுக தலைமையுடன் ஏற்பட்ட மோதலில், தனது பொருளாளர், இளைஞர் அணிச் செயலாளர் பதவிகளை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்து விட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அத்தகவலை ஸ்டாலின் மறுத்தார். திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சிலர் பரப்பிய வதந்தி அது என அவர் விளக்கமளித்தார். இந்த பரபரப்புகளின் பின்னணியில், சென்னை கோபாலபுரத்தில்...
Keep Reading

 
  First   « Prev   3  4  5  6    Next »   Last



விளம்பரம்