சிறந்த திட்டமிடல் இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும்: வருமான வரித் துறை ஆணையர்    |    IndoStar Capital Finance Limited Offer opens on May 9, 2018    |    Catalyst PR - Receive ISO Certification    |    UBM India announces the maiden edition of The Chennai Jewellery and Gem Fair    |    Vibrant Tamilnadu Food Expo 12-15 August @ Madurai    |    Get Endo 2018 Conference on Obstetrics & Gynaecology    |    600 Healthcare Experts will attend CAHOCON 2018    |    Suryoday Small Finance Bank (SSFB) launches a unique branch expansion model - Partners with Ex-Bankers    |    Get a good night's rest with Philips Hue White Ambiance this World Sleep Day    |    On World Sleep Day, Philips India intensifies awareness on sleep disorders    |   
Total Visitors : site stats
  First   « Prev   27  28 
POLITICS NEWS     |     May 23, 2013

சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் மக்கள் மன்றத்தை நாடி..

  சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால், மக்கள் மன்றத்தை நாடி வந்து இருக்கிறேன் என்று தென்காசியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். நெல்லை மாவட்ட தி.மு.க. சார்பில் தேர்தல் நிதி அளிப்பு பொதுக்கூட்டம் தென்காசி வேன் ஸ்டாண்டில் நேற்று இரவு நடைபெற்றது. தென்காசி நகர செயலாளர் ஆயான் எஸ்.நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் வரவேற்றுப் பேசினார்.நெல்லை மாவட்ட தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியாக, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.3 கோடிக்கான காசேலை வழங்கப்பட்டது.நிதியை...
Keep Reading

 
POLITICS NEWS     |     May 18, 2013

ஜெயலலிதாவின் 2 ஆண்டுகால சாதனை புகைப்பட கண்காட்சி : இன்று தொடங்கியது

  முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான் அதிமுக ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் சாதனையை விளக்கும் வகையில் மதுரையில் புகைப்படக் கண்காட்சி ஒன்று இன்று தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் நாகமலைபுதுகோட்டையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டுஆண்டு சாதனைகள் விளக்கும் புகைப்படக் கண்காட்சி தொடங்கியுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அன்சுல் மிஸ்ரா தலைமையில், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜைக்கையன் முன்னிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர்...
Keep Reading

 
POLITICS NEWS     |     May 16, 2013

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக அரசு!

  அ.தி.மு.க. ஆட்சி 3-ம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதையொட்டி சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி 3-வது முறையாக பதவி ஏற்று 2 ஆண்டுகள் முடிவடைந்து இன்று 3-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதையடுத்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று காலை 9.45 மணிக்கு சட்டசபைக்கு வந்தபோது உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை தட்டி வரவேற்பு அளித்தனர். பின்னர் 10 மணிக்கு சபை நடவடிக்கைகள் தொடங்கியதும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவைப் பாராட்டி பேசினார்கள். தி.மு.க.,...
Keep Reading

 
POLITICS NEWS     |     May 12, 2013

விருதுநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நீக்கம்: ஜெயலலிதா நடவடிக்கை

  அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்- அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில், செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், விருது நகர் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி...
Keep Reading

 
POLITICS NEWS     |     May 8, 2013

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 106 நலிந்த தொழிலாளர்களுக்கு ரூ.53 லட்சம் நிதி..

  அண்ணாதொழிற்சங்கத்தைச் சேர்ந்த 106 நலிந்த தொழிலாளர்களுக்கு ரூ.53 லட்சத்தை சென்னையில் முதல்அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வழங்கினார். அண்ணா தொழிற்சங்கம் உழைப்போர் திருநாளாம் மே தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை...
Keep Reading

 
POLITICS NEWS     |     Apr 28, 2013

அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த செங்கோட்டையனுக்கு ஜெயலலிதா அதிரடி..

  முன்னாள் அமைச்சரும், கோபி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவுமான கே.ஏ. செங்கோட்டையன் அதிமுகவில் சமீப காலமாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் நேற்றிரவு குள்ளம்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் இருந்த செங்கோட்டையனை முதல்வர் ஜெயலலிதா தொலைபேசியில் தொடர்பு கொண்டு கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உத்தரவிட்டார். நீண்டநாட்களாக தன்னுடன் பேசுவதைக் கூட தவிர்த்து வந்த முதல்வரே தன்னைத் தொடர்பு கொண்டு பேசியதால் ஆனந்தமடைந்த செங்கோட்டையன், இன்று அதிகாலையே...
Keep Reading

 
POLITICS NEWS     |     Apr 28, 2013

விஜயகாந்த்துடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு

  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார். மாமல்லபுரத்தில் பா.ம.க. நடத்திய விழாவிற்கு வந்தவர்கள் மரக்காணத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகவும், இதனால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டினார். பா.ம.க. நிறுவனர் வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருவதாகவும், இதனால் மத நல்லிணக்கத்திற்கும், அமைதிக்கும் பாதிப்பு ஏற்படுவதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் ஜாதி...
Keep Reading

 
POLITICS NEWS     |     Apr 25, 2013

தமிழக மாணவர் காங்கிரஸ் தேர்தல்: 17 மாவட்டங்களில் வாசன் ஆதரவாளர்கள்..

  தமிழக மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் 3 கட்டங்களாக நடந்தது. ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கான ஓட்டு எண்ணிக்கை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. மற்ற மாவட்டங்களுக்கு அந்த அந்த மண்டலங்களில் நடந்தது. மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில் 17 மாவட்ட தலைவர் பதவியை வாசன் ஆதரவாளர்கள் கைப்பற்றினார்கள். 12 மாவட்டங்களை ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் கைப்பற்றி இருக்கிறார்கள். தங்கபாலு, பிரபு ஆதரவாளர்கள் தலா ஒரு மாவட்டத்தையும் சுயேட்சை வேட்பாளர் ஒரு மாவட்டத்தையும்...
Keep Reading

 
  First   « Prev   27  28 



விளம்பரம்