CENTRE FOR MONOGENIC DIABETES' INAUGURATED AT DR. MOHAN'S DIABETES SPECIALITIES CENTRE    |    Westminster-Cipaca Join Hands to Start COVID -ICU Unit    |    VIJAI TRUCKING HAS BEEN AWARDED THE DEALERSHIP FOR TATA MOTORS COMMERICAIL VEHICLE DIVISION    |    SIMS Hospitals, Vadapalani performs successful Microsurgical Liver Transplant Surgery, a first of its kind in Tamil Nadu    |    Malabar Gold & Diamonds opens New Show Room In Chennai Anna Nagar.    |    TCL CONNECT 2021 , Chennai    |    Satish Dhawan satellite launched by ISRO onboard the PSLV-C51 rocket    |    ‘ONVI.MOVIE’, India’s Exclusively Pay-Per-View OTT for Movies, will be Launched on 5th March 2021    |    ஒருலட்சம் உயிர்களை காப்பாற்றி சிறப்பாக சாதனை -பாராட்டிய ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை    |    தாம்பரம் முடிச்சூர் , அருள்மிகு வினை தீர்த்த விநாயகர் கோவில், பிரசன்ன வெங்கடேசப் பொருமாள் - கும்பாபிஷேகம்    |   
Total Visitors : site stats
  First   « Prev   3  4  5  6    Next »   Last
INDIA NEWS     |     Apr 7, 2015

ஆந்திராவில் தமிழகத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் உள்பட 20 பேர்..

  திருப்பதியில் சேஷாத்திரி வனப்பகுதியில் தமிழகத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் உள்பட 20 பேர் ஆந்திர வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செம்மர கடத்தல் தொழிலில் கொடிகட்டி பறக்கும் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர்கள் திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், சேலம் மாவட்டம் எல்லையோரங்களில் வசிக்கும் தொழிலாளிகளை செம்மரக்கடத்தலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் ஒரே நேரத்தில் வனத்துறை அதிகாரிகள் நடத்திய...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 6, 2015

ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணையுங்கள்: ஓய்வூதியதாரர்களுக்கு..

  மத்திய அரசு ஓய்வூதியதாரகள்,ஓய்வூதியம் பெறுபவர்கள்,குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் தாங்கள் வைத்திருக்கும் வங்கி கணக்குடன் ஆதர் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். ஓய்வூதியம் பெறுவதில் சிக்கலை தவிர்க்க முடியும் என்று ஓய்வூதியதாரகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் சுமார் 50 லட்சம் பேர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 6, 2015

உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிரா: பேப் இந்தியா நிறுவனத்தின் உயர்மட்ட..

  மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இராணி சென்ற கடையின் உடை மாற்றும் அறையில் கேமிரா பொருத்தப்பட்டிருந்தது தொடர்பாக பேப் இந்தியா நிறுவனத்தில் உயர்மட்ட நிர்வாகிகளிடம் நாளை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர். கோவா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இராணி காண்டோலிம் பகுதியில் உள்ள பேப் இண்டியா ரெடிமேட் கடைக்கு சென்று சில ஆயத்த ஆடைகளை வாங்கினார். பின்னர், தனது உடலுக்கு அந்த ஆடை பொருத்தமாக உள்ளதா? என்பதை சரிபார்ப்பதற்காக...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 6, 2015

பைக் மீது கார் மோதி விபத்து: பைக்கை ஓட்டி வந்தவர் அடித்து கொலை..

  ஷாநவாஸ் என்பவர் மத்திய டெல்லி அருகே உள்ள துர்க்மான் கேட் பகுதியில் பைக்கில், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு ஐ.20-காருடன் அவரது இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விபத்துக்கு யார் காரணம் என்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் வாக்குவாதம் முற்றி, பெரும் சண்டையாக மாறியது. இதில் பைக்கில் வந்த ஷாநவாஸ் கடுமையாக தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் பொதுமக்கள்...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 6, 2015

இந்தியாவின் புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஸ்கார்ப்பீன்.. மத்திய..

  பி75 திட்டத்தின் கீழ் முதல் நீர்மூழ்கிக் கப்பலான ஸ்கார்ப்பீன் இன்று தொடங்க வைக்கப்பட்டு கடலில் விடப்பட்டது. மும்பையில் நடந்த துவக்க விழாவில் கலந்து கொண்டு மும்பை பாண்டூனில் அதனுடைய பயணத்தினைத் துவக்கி வைத்துள்ளார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர். இந்த நிகழ்ச்சியில் பாரிக்கருடன், கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் ஆர்.கே.தோவன் மற்றும் பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நீர்மூழ்கிக் கப்பலுக்குள் சென்று அதைப் பார்வையிட்டார் அமைச்சர் பாரிக்கர்.
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 5, 2015

நீதிபதிகள் மிகுந்த கவனத்துடன் தீர்ப்பு வழங்க வேண்டும்: மோடி

  டெல்லியில் நடைபெறும் முதல்-மந்திரிகள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, நீதிபதிகள் செய்யும் பணியானது கடவுளுக்கு அடுத்தப்படியானது என்று கூறினார். புதுடெல்லியில் முதல்-மந்திரிகள் மற்றும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு இன்று நடைபெறுகிறது. மத்திய சட்டத்துறை அமைச்சகம் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடுகளை செய்துள்ளது. சட்டத்துறை எதிர்கொள்ளும் நிர்வாக பிரச்சினைகள், வழக்கு தேக்கம் மற்றும் அவற்றை விரைவில் தீர்ப்பதற்கான ஆலோசனைகள் ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் பேசப்படுகிறது....
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 5, 2015

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும்:..

  சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட தமிழக நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க என்று டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நீதித்துறை மாநாட்டில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். மத்திய சட்ட அமைச்சகம் சார்பில் டெல்லி விஞ்ஞான் பவனில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்த தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது: "ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழக அரசு, ஏழை - எளிய மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கச் செய்ய முதன்மையான...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 4, 2015

மலையேற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபு ஆண்டிஸ் மலைத் தொடரில் மரணம்!

  7 கண்டங்களிலும் உள்ள முக்கிய மலைகளில் மலையேறி சாதனை படைத்தவரான இந்தியாவின் மல்லி மஸ்தான் பாபு என்ற மலையேற்ற வீரர் தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைத் தொடரில் உயிரிழந்தார். இந்தியாவைச் சேர்ந்த மல்லி மஸ்தான் பாபு உலகப் புகழ் பெற்ற மலையேற்ற வீரர்களில் ஒருவர். இவரது வேலையே மலையேற்றம்தான். ஏதாவது ஒரு மலையில் ஏறியபடி இருப்பது இவரது பொழுதுபோக்காகும். உலகின் 7 கண்டங்களிலும் உள்ள முக்கிய மலைகள் அனைத்திலும் ஏறி சாதனை படைத்தவர். இதற்காக அவரை 7 சம்மிட்டீர் என்று செல்லமாக அழைப்பார்கள். அதையும் குறுகிய காலத்தில் 7 கண்ட முக்கிய...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 4, 2015

நிலம் கையகப்படுத்த புதிய அவசர சட்டம் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்

  ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் காலாவதி ஆவதால், அது தொடர்பான புதிய அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி நேற்று ஒப்புதல் அளித்தார். நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, நிலம் கையகப்படுத்தும் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அதில் சில திருத்தங்கள் செய்து, தொழில் வளர்ச்சி, சாலை மேம்பாடு, துறைமுகங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் அமைத்தல்...
Keep Reading

 
INDIA NEWS     |     Apr 3, 2015

அரசு ஊழியரை தாக்கிய கோவா மந்திரி குற்றவாளி என தீர்ப்பு

  கோவா மாநில ஊரக வளர்ச்சித்துறை மந்திரியான பிரான்சிஸ்கோ மிக்கி பச்சேகோ, மின்சாரத்துறையில் பணியாற்றி வந்த அரசு ஊழியர் ஒருவரை கடந்த 2006-ம் ஆண்டு தாக்கினார். இது தொடர்பான வழக்கில் பிரான்சிஸ்கோ குற்றவாளி என மும்பை ஐகோர்ட்டின் கோவா பெஞ்சு கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மந்திரி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கலிபுல்லா, சிவா கீர்த்தி சிங் ஆகியோரை கொண்ட அமர்வு, மந்திரி பிரான்சிஸ்கோவின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், அரசு ஊழியரை தாக்கிய வழக்கில்...
Keep Reading

 
  First   « Prev   3  4  5  6    Next »   Last



விளம்பரம்