TAPMA Plans Huge Demonstration on 13th Dec. for Withdrawal of Plastics Ban    |    ALLEN Career Institute launches study centre in Chennai    |    Ford Inaugurates Dhruvan Ford Sales and Service Facility in Chennai    |    Chartered Accountant Training Program by Education Department    |    Stroke Awareness Walkathon by SIMS Hospital    |    Bonfiglioli Sets Up a New Facility in Chennai    |    United India Insurance - MEGA INSURANCE ADVISORS MEET AT CHENNAI ON 28/08/2018    |    Vishal 3R Lab innaugurated by Seema Agarwal IPS    |    CII and Grundfos Inaugurate GangaiAmman Koil Kulam (Tank)    |    TUTUCORIN CONTRACTORS ASSOCIATION PRESS MEET REGARDING STERILITE    |   
Total Visitors : site stats
Nov 14, 2018     |     GO BACK     |     Share
 
 
சென்னை சிறப்பாசிரியர் தேர்வில் தமிழ்வழி சான்றிதழ் பிரச்சினை குறித்து விசாரிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தையல், ஓவியம், இசை, உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிநியமனம் தொடர்பான தற்காலிக இறுதி தேர்வுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் வெளியிட்டது. அதில், தையல், ஓவியம் பாடத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் எழுத்துத்தேர்வு மதிப்பெண் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு மதிப்பெண் இரண்டும் சேர்த்து அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் பல தேர்வர்களின் பெயர் இடம்பெறவில்லை. ஆனால், அவர்களைக் காட்டிலும் குறைந்த மதிப்பெண் பெற்ற தேர்வர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. பாதிக்கப்பட்ட தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரில் சென்று விளக்கம் கேட்டபோது, ஹையர் கிரேடு தேர்வுக்கு தமிழ்வழிச்சான்றிதழ் சமர்ப்பிக்காததால் அவர்கள் இறுதி தேர்வுபட்டியலுக்கு பரிசீலிக்கப்படவில்லை என்று கூறினர். ஹையர் கிரேடு தேர்வை நடத்தும் அரசு தேர்வுத்துறையானது தொழில்நுட்ப தேர்வுகளுக்கு தமிழ்வழி சான்றிதழ் வழங்குவதில்லை என்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும் கடிதம் அனுப்பியது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மட்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் பெற்றுக்கொண்டது. ஒருவார காலம் ஆகியும் ஆசிரியர் தேர்வு வாரியம் இம்மனுக்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், சிறப்பாசிரியர் தேர்வு பிரச்சினை தொடர்பாக சென்னையில் நேற்று முன்தினம் நடந்த குழந்தைகள் தினவிழாவில் விளக்கம் அளித்த பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்வழியில் படித்தவர்கள், விதவைகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் அல்லது சார்-ஆட்சியரிடம் உரிய சான்றிதழ் வழங்கி 4 வார காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அமைச்சரின் இந்த அறிவிப்பு சிறப்பாசிரியர் தேர்வர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது. காரணம், விதவைகள், முன்னாள் ராணுவத்தினர் கோட்டாட்சியரிடம் உரிய சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு கோட்டாட்சியர் எப்படி சான்றிதழ் வழங்க முடியும், ஹையர் கிரேடு தேர்வை நடத்திய அரசு தேர்வுத்துறை தானே அதுதொடர்பான சான்றிதழை வழங்க இயலும் என்று கருத்து எழுந்தது. இதுகுறித்து சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் விளக்கம் கேட்டபோது அவர் கூறியதாவது:- தமிழ்வழியில் படித்தவர்கள் என்று நான் குறிப்பிட்டது வெளிமாநிலங்களில் தமிழ்வழியில் படித்தவர்கள் அதற்கான ஆவணங்களை சம்பந்தப்பட்ட கோட்டாட்சியரிடம் காண்பித்து சான்றிதழ் வழங்க வேண்டும். அதேபோல், ஆதரவற்ற விதவைகளும், முன்னாள் ராணுவத்தினரும் தங்களுக்கு உரிய சான்றிதழை அவரிடம் பெற்றுவர வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு 10 நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் 4 வார காலத்துக்குள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கான இடங்கள் பொதுப்பிரிவினரைக் கொண்டு நிரப்பப்படும். ஓவியம், தையல் பாடத்தில் ஹையர் கிரேடு தேர்வுக்கு தமிவழிச்சான்றிதழ் பிரச்சினை குறித்து கேட்கிறீர்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிபுணர் குழுவினர் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள் என்றார்.