CENTRE FOR MONOGENIC DIABETES' INAUGURATED AT DR. MOHAN'S DIABETES SPECIALITIES CENTRE    |    Westminster-Cipaca Join Hands to Start COVID -ICU Unit    |    VIJAI TRUCKING HAS BEEN AWARDED THE DEALERSHIP FOR TATA MOTORS COMMERICAIL VEHICLE DIVISION    |    SIMS Hospitals, Vadapalani performs successful Microsurgical Liver Transplant Surgery, a first of its kind in Tamil Nadu    |    Malabar Gold & Diamonds opens New Show Room In Chennai Anna Nagar.    |    TCL CONNECT 2021 , Chennai    |    Satish Dhawan satellite launched by ISRO onboard the PSLV-C51 rocket    |    ‘ONVI.MOVIE’, India’s Exclusively Pay-Per-View OTT for Movies, will be Launched on 5th March 2021    |    ஒருலட்சம் உயிர்களை காப்பாற்றி சிறப்பாக சாதனை -பாராட்டிய ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை    |    தாம்பரம் முடிச்சூர் , அருள்மிகு வினை தீர்த்த விநாயகர் கோவில், பிரசன்ன வெங்கடேசப் பொருமாள் - கும்பாபிஷேகம்    |   
Total Visitors : site stats
Apr 25, 2015     |     GO BACK     |     Share
 
 
தமிழ்நாட்டில் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 538 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை 2 விதமாக நடைபெற உள்ளது. அதாவது மாணவர் சேர்க்கை இடங்களில் அரசு இடஒதுக்கீட்டு இடங்கள் என்றும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்லூரியில் உள்ள இடங்களில் 65 சதவீதத்தை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் (அரசு ஒதுக்கீட்டுக்கு) கலந்தாய்வுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளாக இருந்தால் அவர்கள் 50 சதவீத இடங்களைத்தான் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வுக்கு கொடுக்க வேண்டும். பொதுவான கல்லூரிகள் வைத்துக்கொள்ளும் இடங்கள் 35 சதவீதமாகும். அந்த இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கையை அந்தந்த கல்லூரிகளே நிரப்பிக்கொள்ளலாம். அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் மாணவர் சேர்க்கை தான் பெரிய அளவிலானதாகும். அவ்வாறு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே மாதம் 6-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்ப படிவங்கள் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 60 மையங்களில் கொடுக்கப்படும். விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் மே மாதம் 29-ந் தேதி வரை கொடுக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் தவிர மற்ற 59 மையங்களில் விண்ணப்ப படிவம் வினியோகிக்க 27-ந் தேதி தான் கடைசி நாள். ஆனால் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்க அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 60 மையங்களிலும் மே 29-ந் தேதி தான் கடைசி நாள். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இதற்காக அண்ணா பல்கலைக்கழகம் 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்களை அச்சடித்து உள்ளது. கலந்தாய்வு சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே நடத்தப்பட உள்ளது. இந்த வருடம் மாணவர் சேர்க்கைக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் இடங்கள் உள்ளன. ஆனால் எத்தனை இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரியாது. ஆனால் கடந்த வருடம் 1 லட்சத்து 15 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பின. விண்ணப்ப கட்டணம் ரூ.500 மட்டுமே. ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களின் சாதி சான்றிதழ் ஜெராக்ஸ் கொடுத்தால் அவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 மட்டுமே. என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவ-மாணவிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகள் இப்போதே அதற்கான சான்றிதழை தாசில்தாரிடம் பெற்று வைத்துக்கொள்ளலாம். அதுபோல நேட்டிவிட்டி சான்றிதழும் பெற்று வைத்திருத்தல் நல்லது. ரேங்க் பட்டியல் வெளியிடும் தேதி மற்றும் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். அப்போது அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் எஸ்.கணேசன், அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை இயக்குனர் பேராசிரியர் ஜி.நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். கடந்த ஆண்டு எந்த கட் ஆப் மதிப்பெண்ணில், எந்த கல்லூரியில் எந்த பிரிவு கிடைத்தது என்ற விவரம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தலைமையில் கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.