OPS INAUGURATED FAIR PRO -2020 EXPO AT NANDAMBAKKM    |    Paytm to Empower 1 Million Merchants in Tamil Nadu    |    Lizol for the first time in India, launches a new innovative product designed specially for cement surface    |    Newgen Software extends support to 800 children through remedial education programme in Nandabakkam Higher Secondary School, Sriprembadhur, Chennai    |    திறமைக்கு வாய்ப்பளிக்கும் சமூகமே முன்னேறும்!    |    SRI CHAITANYA GROUP OF SCHOOL WORLD RECORD FEST 2019    |    GADGET FREE DAY CAMPAIGN WITH 100 TWINS HELD AT VELAMMAL    |    AMSTRAD - The next generation consumer electronics brand launches in Tamil Nadu    |    ஆவினில் புதிய பால் பொருட்களை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அறிமுகப்படுத்தினார்.    |    சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |   
Total Visitors : site stats
Apr 24, 2015     |     GO BACK     |     Share
 
 
டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது அங்கிருந்த ஒரு மரத்தில் கஜேந்திரசிங் என்ற விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபல அரசியல் தலைவர் ஒருவரின் கண் எதிரிலேயே ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த் சம்பவம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்டார். ஆனால் அவரது மன்னிப்பை கஜேந்திர சிங்கின் குடும்பத்தார் ஏற்று கொள்ளவில்லை. இதற்கிடையே விவசாயி தற்கொலை தொடர்பாக கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி டெல்லி போலீசுக்கு இதுவரை 10 புகார்கள் வந்துள்ளன. நேற்று மாலை கடைசியாக டெல்லி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் அமித் மாலிக், கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு புகார் கொடுத்தார். இது பற்றி அமித்மாலிக் கூறும்போது, விவசாயி கஜேந்திர சிங், கெஜ்ரிவாலையும், மணீஷ் சிசோடியாவையும் சந்திக்க வந்துள்ளார். ஆனால் தொண்டர்கள் அவரை தற்கொலை நாடகமாடினால் தலைவர்கள் கவனத்தை ஈர்க்கலாம் என்று தூண்டி விட்டுள்ளனர். இதனால் தான் அனைவரது கண்முன் அவர் இறந்து இருக்கிறார். அதன் பிறகும் கூட்டம் தொடர்ந்து இருக்கிறது. இதன் மூலம் இது திட்டமிட்ட செயல் என தெரியவருகிறது. எனவே கெஜ்ரிவால் மீதும், மணிஷ் சிசோடியா, குமார் விஸ்வாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றார். இந்தப் புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு அனுப்பப் பட்டு உள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.