OPS INAUGURATED FAIR PRO -2020 EXPO AT NANDAMBAKKM    |    Paytm to Empower 1 Million Merchants in Tamil Nadu    |    Lizol for the first time in India, launches a new innovative product designed specially for cement surface    |    Newgen Software extends support to 800 children through remedial education programme in Nandabakkam Higher Secondary School, Sriprembadhur, Chennai    |    திறமைக்கு வாய்ப்பளிக்கும் சமூகமே முன்னேறும்!    |    SRI CHAITANYA GROUP OF SCHOOL WORLD RECORD FEST 2019    |    GADGET FREE DAY CAMPAIGN WITH 100 TWINS HELD AT VELAMMAL    |    AMSTRAD - The next generation consumer electronics brand launches in Tamil Nadu    |    ஆவினில் புதிய பால் பொருட்களை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அறிமுகப்படுத்தினார்.    |    சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |   
Total Visitors : site stats
Apr 17, 2015     |     GO BACK     |     Share
 
 
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா சொத்து குவித்ததாக கூறப்பட்ட வழக்கில் அவருக்கு பெங்களூர் சிறப்பு கோர்ட்டு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ந்தேதி இந்த தீர்ப்பு வெளியிடப்பட்டது. 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட காரணத்தால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஜெயலலிதா முதல்மந்திரி பதவியையும் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். இதையடுத்து அவர் பெங்களூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். பெங்களூர் ஐகோர்ட்டில் கடந்த அக்டோபர் மாதம் அவர் ஜாமீன் கோரி மனு செய்தார். ஆனால் பெங்களூர் ஐகோர்ட்டு அவருக்கு ஜாமீன் கொடுக்க மறுத்து விட்டது. இதனால் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் நால்வரும் ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர். அவர்களுக்கு அக்டோபர் 17ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தர விட்டது. விடுதலை பெற்ற ஜெயலலிதா தனக்கு அளிக்கப்பட்ட தண்டனை மற்றும் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்தார். நீதிபதி குமாரசாமி முன்னிலையில் அப்பீல் மனு மீதான விசாரணை நடந்தது. ஆனால் அப்பீல் விசாரணையில் அரசு வக்கீலாக பவானி சிங் ஆஜரானதற்கு தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் முடிவு எட்டப்படாத நிலையில் அடுத்தக்கட்டமாக 3 நீதிபதிகள் முன்னிலையில் வரும் 21ந்தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வந்தால்தான் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பை வெளியிட முடியும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய ஜாமீன் நாளை (சனிக்கிழமை)யுடன் முடிகிறது. இதைத் தொடர்ந்து 4 பேரும் ஜாமீனை நீட்டிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தத்து முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை மே மாதம் 12ந்தேதி வரை நீட்டிப்பு செய்து நீதிபதி தத்து உத்தரவிட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் மே மாதம் 12ந்தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு செய்யப்படுவதாக நீதிபதி தத்து உத்தரவிட்டார். இதற்கிடையே ஜெயலலிதா தரப்பு வக்கீல், இந்த வழக்கு முழுமையாக முடியும் வரை ஜாமீன் நீட்டிப்பு செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் நீதிபதி தத்து அதை ஏற்க மறுத்து விட்டார். பவானி சிங் நியமனம் தொடர்பான மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது. அதில் வரும் முடிவைப் பொறுத்து ஜாமீன் நீட்டிப்பு செய்யப்படும் என்று நீதிபதி தத்து கூறினார். இதையடுத்து பெங்களூர் தனிக் கோர்ட்டு நீதிபதி குமாரசாமி எழுதிய கடிதம் பற்றி விவாதம் எழுந்தது. அப்போது நீதிபதி தத்து, மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை மே மாதம் 12ந்தேதி வரை வழங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து சுப்பிரமணியசாமி, பெங்களூர் ஐகோர்ட்டு நீதிபதி வகேலா மாற்றம் செய்யப்பட்டது பற்றிய பிரச்சினையை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தார். அதை நீதிபதி தத்து ஏற்கவில்லை.