Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |    Nano Life First time launching @ T.Nagar,Chennai    |    RISHS INTERNATIONAL SCHOOL 3'rd ANNUAL DAY 05-02-2019    |    Inaugural 64-team BOOST Chennaiyin FC Football Championship announced    |    Dr.Paul Dhinakaran's Family Wedding reception at Vanagaram    |    The 31 Plenary Assembly of the Conference of the Catholic Bishops of India    |   
Total Visitors : site stats
Apr 17, 2015     |     GO BACK     |     Share
 
 
காஷ்மீரில் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் கொடிகளை ஏந்தியபடி வந்த விவகாரத்தில் பிரிவினைவாத தலைவர் மசரத் ஆலம் கைது செய்யப்பட்டார். காஷ்மீர் பிரிவினைவாத இயக்கமான ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவர் சையத் அலி ஷா கிலானி, சமீபத்தில் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பிரிவினைவாத தலைவர் மசரத் ஆலம் ஆகியோர் நேற்று இரவு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அவர்கள் நேற்றுமுன்தினம் பங்கேற்ற பேரணியில், பாகிஸ்தான் கொடிகளுடன் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதற்கு பலத்த கண்டனம் எழுந்தது. இதனால், இருவர் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, ராணுவத்தால் 2 இளைஞர்கள் சுட்டு கொல்லப்பட்டதாக கூறி, புல்வாமா மாவட்டம் திரால் நகரில் இன்று நடக்கும் பேரணிக்கு கிலானி செல்ல திட்டமிட்டு இருந்தார். அதை தடுத்து சட்டம்ஒழுங்கை காக்கும் நடவடிக்கையாக, அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவரது வீடு முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மசரத் ஆலம் வீடு முன்பும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். திரால் நகரில் பேரணி வெற்றிகரமாக நடைபெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே எங்களை வீட்டுக் காவலில் வைத்து உள்ளனர் என்று மசரத் ஆலம் தெரிவித்தார். இந்நிலையில் காலையில் மசரத் ஆலத்தை போலீசார் கைது செய்தனர். திரால் நகரிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மசரத் ஆலம் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். கிலானி வீட்டிற்கு வெளியேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே இதுதொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நலின் கோக்லி, கைதில் எங்களுக்கு எந்தஒரு ஆச்சரியமும் இல்லை, தேசத்திற்கு எதிரான எந்தஒரு நடவடிக்கைக்கும் அனுமதி அளிக்கப்படாது என்பதில் பாரதீய ஜனதா மிகவும் தெளிவாக உள்ளது. என்று கூறினார்.