Chartered Accountant Training Program by Education Department    |    Stroke Awareness Walkathon by SIMS Hospital    |    Bonfiglioli Sets Up a New Facility in Chennai    |    United India Insurance - MEGA INSURANCE ADVISORS MEET AT CHENNAI ON 28/08/2018    |    Vishal 3R Lab innaugurated by Seema Agarwal IPS    |    CII and Grundfos Inaugurate GangaiAmman Koil Kulam (Tank)    |    TUTUCORIN CONTRACTORS ASSOCIATION PRESS MEET REGARDING STERILITE    |    சிறந்த திட்டமிடல் இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும்: வருமான வரித் துறை ஆணையர்    |    IndoStar Capital Finance Limited Offer opens on May 9, 2018    |    Catalyst PR - Receive ISO Certification    |   
Total Visitors : site stats
Apr 16, 2015     |     GO BACK     |     Share
 
 
கோவாவில் உள்ள துணிக்கடை ஒன்றின் உடை மாற்றும் ரகசிய கேமிரா பொருத்தப்பட்டிருந்த விவகாரத்தில் முக்கிய சாட்சியாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி பெயர் சேர்க்கப்படலாம் என்று மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இராணியை போல், மேலும் இரண்டு பாரதீய ஜனதா எம்.எல்.ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகளை இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, பேப் இந்தியா நிறுவனத்தின் துணிக்கடையில் உடை மாற்றும் அறையை நோக்கி கேமிராவை திருப்பி வைத்த ஊழியரை போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த வழக்கில், தடயவியல் அறிக்கை வந்த பின்னரே குற்றப்பத்திரிகை இறுதி செய்யப்படுகிறது. இந்த வழக்கில் கடையின் நான்கு ஊழியர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்த வழக்கு குறித்து பெயர் வெளியிட விரும்பாத மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணியிடம் முதல் நாளில் நாங்கள் வாக்குமூலம் பெற்றோம். இருப்பினும் அவரது பெயரை சாட்சியமாக குற்றப்பத்திரிகையில் சேர்ப்பதா இல்லையா என்பது விசாரணை அதிகாரியின் உரிமைக்குட்பட்டது என்று தெரிவித்தார். வழக்கின் பிண்ணனி:- கோவா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இராணி காண்டோலிம் பகுதியில் உள்ள பேப் இண்டியா ரெடிமேட் கடைக்கு சென்று சில ஆயத்த ஆடைகளை வாங்கினார். பின்னர், தனது உடலுக்கு அந்த ஆடை பொருத்தமாக உள்ளதா? என்பதை சரிபார்ப்பதற்காக கடையினுள் இருந்த உடை மாற்றும் அறைக்குள் நுழைந்தார். அப்போது, வெளியே காத்திருந்த மந்திரியின் உதவியாளர், உடை மாற்றும் அறையை குறிவைத்தபடி ஒரு ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உடனடியாக, மந்திரி ஸ்மிரிதி இராணிக்கு இது தொடர்பான தகவலை தெரிவித்து எச்சரித்தார். இதையடுத்து மத்திய மந்திரியின் புகாரின் பேரில் கோவா மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்