சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
Apr 16, 2015     |     GO BACK     |     Share
 
 
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக் கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக் கப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதா சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் பெங்களூரில் தனி நீதிமன்றத் தில் ஜெயலலிதா அப்பீல் மனு மீதான விசாரணை நடந்தது. நீதிபதி குமாரசாமி தலைமையில் நடந்த அந்த விசாரணையில் அரசு தரப்பு வக்கீலாக பவானிசிங் ஆஜராகி வாதாடினார். இதற்கு தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பவானிசிங்கை நீக்கக் கோரி தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதன்லோகுர், பானுமதி விசாரித்தனர். அவர்கள் நேற்று தீர்ப்பளித்தனர். அவர்கள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்டனர். மதன்லோகுர் அளித்த தீர்ப்பில், 'பவானிசிங் நியமனம் செல்லாது' என்றார். ஆனால் நீதிபதி பானுமதி, 'பவானிசிங் நியமனம் செல்லும்' என்றார். இரு தீர்ப்புகளும் முரண்பாடாக இருந்ததால் நீதிபதிகள் மதன்லோகுர், பானுமதி இருவரும் சேர்ந்து ஒரு உத்தரவை வெளியிட்டனர். அதில் அவர்கள், 'அன்பழகன் மனு மீதான விசாரணையை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்கிறோம்' என்று உத்தரவிட்டனர். இதையடுத்து அன்பழகன் மனுவை இனி 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் ஜெயலலிதா அப்பீல் வழக்கு தீர்ப்பில் பல்வேறு சிக்கல்களையும், தாமதத்தையும் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள முதல் சிக்கல் பவானிசிங் நியமனம் செல்லுமா? செல்லாதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டியதாகும். இதில் தீர்வு காணாமல் ஜெயலலிதா அப்பீல் வழக்கில் தீர்ப்பை குமாரசாமி வெளியிட முடியாது என்று பல்வேறு சட்ட நிபுணர்களும் கூறுகிறார்கள். எனவே பவானிசிங் நியமனம் வழக்கு தொடர்பாக 3 நீதிபதிகளின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 3 நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தத்து தேர்வு செய்து நியமிக்க வேண்டும். பிறகு அந்த 3 நீதிபதிகளும் விசாரணையை தொடங்குவார்கள். இந்த விசாரணை எப்போது தொடங்கும், எப்போது முடியும் என்று தெரியவில்லை. பொதுவாக ஒரு வழக்ku தொடர்பான முக்கிய மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்தால், அந்த வழக்கு தீர்ப்பை மாநில விசாரணை நீதிமன்றம் வெளியிடாது. அதன்படி பவானிசிங் நியமனம் தொடர்பான அன்பழகன் மனு சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வரை குமாரசாமியால் தீர்ப்பை வெளியிட முடியாது என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஜெயலலிதா அப்பீல் வழக்கில் தீர்ப்பு வெளியாக மேலும் கால தாமதம் ஏற்படலாம் என்று தெரிகிறது. இதற்கிடையே இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக தனிக்கோர்ட்டு நீதிபதி குமாரசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது. ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பை வெளியிடுவது பற்றி குமாரசாமியே முடிவு செய்து கொள்ளலாம் என்று நேற்று நீதிபதி மதன்லோகுர் கூறியிருந்தார். ஆனால் இந்த விஷயத்தில் நீதிபதி குமாரசாமி தன்னிச்சையாக, உடனடியாக எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. குமாரசாமி திட்டமிட்டப்படி 3 மாதத்தில் ஜெயலலிதாவின் அப்பீல் மனு மீதான விசாரணையை முடித்து விட்டார். அதன் அடிப்படை யில் அவர் தீர்ப்பை எழுதி வருகிறார். 90 சதவீத தீர்ப்பை அவர் எழுதி முடித்து விட்ட தாக தெரிகிறது. குமாரசாமி தன் தீர்ப்பில் அரசு வக்கீல் என்னென்ன வாதம் செய்தார் என்பதை எழுத வேண்டும். தற்போது அரசு வக்கீலாக பவானிசிங் நியமனம் செல்லுமா, செல்லாதா? என்ற இழுபறி ஏற்பட்டுள்ளதால் அவர் அரசு வக்கீலாக பவானிசிங் பெயரை உறுதியாக குறிப் பிட்டு எழுத முடியாத சூழ் நிலை உள்ளது. எனவே அரசு வக்கீல் பற்றி அதிகாரப்பூர்வமாக சுப்ரீம் கோர்ட்டில் தீர்க்க மான முடிவு ஏற்படும் வரை குமாரசாமியால் முழுமையாக தீர்ப்பை எழுத முடியாது என்று கூறப் படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்த குமாரசாமி அடுத்தக் கட்டமாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடமும், கர்நாடகா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடமும் ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பிறகே அவர் ஒரு முடிவுக்கு வருவார் என்று தெரிகிறது. இதற்கிடையே குமாரசாமி தீர்ப்பு வழங்க சுப்ரீம் கோர்ட்டு எந்த தடையும் விதிக்காததால் குமாரசாமி தீர்ப்பை வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஜெயலலிதா அப்பீல் வழக்கு விசாரணை தீர்ப்பை வெளியிடுவது தற்போது குமாரசாமி கையில் உள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் குமாரசாமி இந்த விவகாரத்தில் சற்று கால அவகாசம் எடுத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தத்துவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தீர்ப்பு வழங்குவதற்கான கால அவகாசம் முடிகிறது. அந்த அவகாசத்தை மேலும் 2 வாரங்களுக்கு அதாவது இம்மாதம் 30-ந்தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் ஜெயலலிதா அப்பீல் மனு வழக்கில் இம்மாதம் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. 'அரசு வக்கீல் யார்?' என்ற கேள்விக்கு விடை காணும் வரை காத்திருக்கலாம் என்ற குமாரசாமி முடிவு செய்தால் மற்றொரு சிக்கல் உருவாக வாய்ப்புள்ளது. அது என்ன வென்றால் நீதிபதி குமாரசாமியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால் அவர் இன்னும் 4 1/2 மாதங்களுக்கு மட்டுமே பதவியில் இருப்பார். அதற்குள் அரசு வக்கீல் நியமனம் விவகாரத்தில் முடிவு ஏற்பட வேண்டும். அப்படி முடிவு ஏற்படாமல், குமாரசாமியின் பதவிக் காலமும் முடிந்து போனால், ஜெயலலிதா அப்பீல் மனுவை விசாரிக்க வேறு ஒரு நீதிபதியை நியமனம் செய்ய வேண்டியது ஏற்படலாம். அந்த புது நீதிபதி மீண்டும் புதிதாக விசாரணையை தொடங்கி நடத்தி முடிக்க வேண்டும். அப்படி ஒரு சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் ஜெயலலிதா அப்பீல் வழக்கு முடிய மேலும் சில மாதங்கள் காலதாமதம் ஏற்படக்கூடும் என்று பேசப்படுகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் உள்ள மற்றொரு சிக்கல் பற்றியும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். அதாவது சுப்ரீம் கோர்ட்டில் அடுத்து 3 நீதிபதி கள் கொண்ட பெஞ்ச் விசாரணை நடத்தி, 'பாவனி சிங் நியமனம் செல்லாது' என்று அறிவித்து விட்டால், ஜெயலலிதா அப்பீல் வழக்கு விசாரணைக்கு பவானிசிங்குக்கு பதில் வேறு ஒரு புதிய அரசு வக் கீலை நியமனம் செய்ய வேண்டியதிருக்கும். அத்தகைய சூழ்நிலையில் புதிய அரசு வக்கீல், இந்த வழக்கு பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆவணங்களை படிக்க வேண்டும். அதன் பிறகே அவர் வாதாட முடியும். அந்த விசாரணை எப்போது தொடங்கும், எப்போது முடியும் என்றெல்லாம் யாராலும் கணிக்க முடியாது. இது கண்ணுக்கு புலப்படாத சிக்கலாக இருப்பதாக சட்ட நிபுணர்கள் சொல் கிறார்கள். இந்த நிலையில் கோர்ட்டுகளுக்கு விடப்படும் கோடை கால விடுமுறையும் இந்த வழக்குக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டுக்கு மே மாதம் 18-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் 30-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே 3 நீதிபதிகளை நியமித்து அன்பழகன் மனு மீதான விசாரணை இம்மாத இறுதிக்குள் தொடங்கப் பட்டாலும் அது மே, ஜூன் மாதங்களில் சுமார் 42 நாட்களுக்கு நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அது போல கர்நாடக ஐகோர்ட்டுக்கு அடுத்த மாதம் முழுவதும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் தனிக்கோர்ட்டு நீதிபதி குமாரசாமி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் பேசி முடிவுகள் எடுக்க வேண்டும். ஏற்கனவே குமாரசாமி இம்மாதம் 30-ந்தேதி வரை அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே மே, ஜூன் மாதங்களில் அவரால் தீர்ப்பை வெளியிட முடியுமா? என்று சிலர் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். இப்படி பல்வேறு விதமான சிக்கல்கள் சூழ்ந்துள்ள காரணத்தால் ஜெயலலிதா அப்பீல் வழக்கு தீர்ப்பு தாமதம் ஆவது தவிர்க்க முடியாததாகி உள்ளது. இந்த கால தாமதத்தை குறைப்பதும், கூட்டுவதும் சுப்ரீம் கோர்ட்டு கையிலும், தனிக் கோர்ட்டு நீதிபதி குமாரசாமி கையிலும்தான் உள்ளது.