OPS INAUGURATED FAIR PRO -2020 EXPO AT NANDAMBAKKM    |    Paytm to Empower 1 Million Merchants in Tamil Nadu    |    Lizol for the first time in India, launches a new innovative product designed specially for cement surface    |    Newgen Software extends support to 800 children through remedial education programme in Nandabakkam Higher Secondary School, Sriprembadhur, Chennai    |    திறமைக்கு வாய்ப்பளிக்கும் சமூகமே முன்னேறும்!    |    SRI CHAITANYA GROUP OF SCHOOL WORLD RECORD FEST 2019    |    GADGET FREE DAY CAMPAIGN WITH 100 TWINS HELD AT VELAMMAL    |    AMSTRAD - The next generation consumer electronics brand launches in Tamil Nadu    |    ஆவினில் புதிய பால் பொருட்களை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அறிமுகப்படுத்தினார்.    |    சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |   
Total Visitors : site stats
Apr 16, 2015     |     GO BACK     |     Share
 
 
கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு நடக்கிறது. காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பாளராக தங்கச்சன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியில் பேசும் போது, மாநில போலீசார் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இது உளவு பிரிவு போலீசாரின் வழக்கமான நடைமுறை தான் என்றார். இதற்கு எதிர் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கூறும் போது, ஆளும் கட்சி கேரள எம்.எல்.ஏ.க்களை உளவு பார்க்கிறது. அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது. இது தவறான செயல்பாடாகும் என்றனர். இது பற்றி தகவல் வெளியானதும் முதல்மந்திரி உம்மன்சாண்டி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: கேரளாவில் எம்.எல்.ஏ.க்களை போலீசார் உளவு பார்க்கவில்லை. அப்படி எந்த நடவடிக்கையும் இங்கு நடக்கவில்லை. இது தொடர்பான பிரச்சனை எப்படி உருவானது என தெரியவில்லை. காங்கிரஸ் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் தங்கச்சன் இப்படி பேசவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். அதன் பிறகும் இந்த பிரச்சனையை கிளப்புவது சரி அல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.