OPS INAUGURATED FAIR PRO -2020 EXPO AT NANDAMBAKKM    |    Paytm to Empower 1 Million Merchants in Tamil Nadu    |    Lizol for the first time in India, launches a new innovative product designed specially for cement surface    |    Newgen Software extends support to 800 children through remedial education programme in Nandabakkam Higher Secondary School, Sriprembadhur, Chennai    |    திறமைக்கு வாய்ப்பளிக்கும் சமூகமே முன்னேறும்!    |    SRI CHAITANYA GROUP OF SCHOOL WORLD RECORD FEST 2019    |    GADGET FREE DAY CAMPAIGN WITH 100 TWINS HELD AT VELAMMAL    |    AMSTRAD - The next generation consumer electronics brand launches in Tamil Nadu    |    ஆவினில் புதிய பால் பொருட்களை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அறிமுகப்படுத்தினார்.    |    சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |   
Total Visitors : site stats
Apr 16, 2015     |     GO BACK     |     Share
 
 
சின்னத்திரையில் உறவுகள், அரசி, காயத்ரி, புகுந்தவீடு, பந்தம் போன்ற தொடர்களை இயக்கிய பாலாஜி யாதவ் கடன் தொல்லை மற்றும் வறுமை காரணமாக சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். மொழிமாற்று தொடர்களின் ஆதிக்கத்தால் நேரடி தமிழ் தொடர்களின் தயாரிப்பு குறைந்து வருவதாகவும், இதனால் சின்னத்திரையை சார்ந்துள்ள கலைஞர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதை கண்டிக்கும் விதமாக சின்னத்திரை நடிகர்நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி சின்னத்திரை சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மொழி மாற்று தொடரால் பாதிப்பு போராட்டத்தையொட்டி சென்னை வடபழனியில் உள்ள சென்னை இசை கலைஞர்கள் சங்கத்தில் சின்னத்திரை கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் ராதிகா சரத்குமார், சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் நளினி மற்றும் தென்னிந்திய திரைப்பட இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன், அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஜி.சிவா உள்பட சின்னத்திரை நடிகர்நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் ராதிகா சரத்குமார் பேசியபோது, மொழிமாற்று தொடர்களை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம். இவை தமிழ் தொடர்களை நசுக்கி, சின்னத்திரை கலைஞர்களின் வாழ்வை இருளில் தள்ளி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த கோரும் கவன ஈர்ப்பு போராட்டமாக இது அமையவேண்டும் என்றார். சின்னத்திரை கலைஞர்களின் போராட்டத்திற்கு தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் சங்கத்தை சார்ந்தவர்கள் துணை நிற்பார்கள் என்று தென்னிந்திய திரைப்பட இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் உறுதியளித்தார். தீர்மானம் நிறைவேற்றம் மேலும் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மனோபாலா, விக்ரம், கவிதா பாரதி போன்றோர் மொழி மாற்று தொடர்களுக்கு காப்புரிமை பெற்று அவற்றை தமிழாக்கம் செய்து வெளியிட வலியுறுத்தினர். தமிழ் தொடர்களை ஆதரித்து மொழிமாற்று தொடர்களை நிறுத்த வேண்டும், இதனை வலியுறுத்தி தமிழக அரசுக்கும், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் கோரிக்கை வழங்குதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து போராட்ட அமைப்பினர் மொழிமாற்று தொடர்களை வெளியிடும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு சென்று கோரிக்கை மனுக்களை வழங்கினர்.