சிறந்த திட்டமிடல் இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும்: வருமான வரித் துறை ஆணையர்    |    IndoStar Capital Finance Limited Offer opens on May 9, 2018    |    Catalyst PR - Receive ISO Certification    |    UBM India announces the maiden edition of The Chennai Jewellery and Gem Fair    |    Vibrant Tamilnadu Food Expo 12-15 August @ Madurai    |    Get Endo 2018 Conference on Obstetrics & Gynaecology    |    600 Healthcare Experts will attend CAHOCON 2018    |    Suryoday Small Finance Bank (SSFB) launches a unique branch expansion model - Partners with Ex-Bankers    |    Get a good night's rest with Philips Hue White Ambiance this World Sleep Day    |    On World Sleep Day, Philips India intensifies awareness on sleep disorders    |   
Total Visitors : site stats
Apr 16, 2015     |     GO BACK     |     Share
 
 
தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2015 தொழில் பொருட்காட்சியில் கலந்துக்கொள்வதற்காக, முன்பதிவுகள் வேகமாக நடந்து வருகிறது. சென்னை வர்த்தக மையத்தில், 2015 மே, 23 மற்றும் 24 ல் நடைபெறவுள்ள உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, தமிழக அரசு தொழில் பொருட்காட்சியினை அவ்வளாகத்தின் பிறிதொரு பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளது. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு, தொழில் முதலீட்டாளர்கள் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை 250 க்கும் மேற்பட்ட பொருட்காட்சி அரங்கங்களில் பார்வைக்கு வைத்திருப்பதை காண்பார்கள். இப்பொருட்காட்சி மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு www.tamilnadugim.com இணையதளத்தின் வழியாக முன் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்தல் மற்றும் விவசாய வர்த்தகம், மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்னணு வன்பொருட்கள் போன்ற தொடர்புடைய 12 முன்னணித் துறைகளை முன்னிறுத்துவதால் ஈர்க்கப்பட்டு, பொருட்காட்சிக்கான முன்பதிவு வேகமாகவும், விரைவாகவும் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பதிவு செய்வதற்கான கடைசி நாள் 25.04.2015 (சனிக்கிழமை) ஆகும். பொருட்காட்சி கடைசி நாள் 25.04.2015 (சனிக்கிழமை) ஆகும். அரங்கத்திற்கான இடம் கட்டணம் இன்றி ஒதுக்கப்படும். இதற்கென உருவாக்கப்பட்ட ஒரு குழு பொருட்காட்சிக்கு விண்ணப்பித்தவர்களை தேர்ந்தெடுத்து இடம் வழங்கும். இம்மாநிலம் இதுவரை நடத்திய முதலீட்டினை ஈர்க்கும் முயற்சிகளிலேயே தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர் மாநாடு 2015 தான் மிகப்பெரிய முயற்சியாகும். இம்மாநாட்டின்போது நடத்தப்படவுள்ள பொருட்காட்சியானது தொழில் முதலீட்டிற்கு முதுகெலும்பாக திகழும் உபபொருட்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்குனர் துறையின் மேம்பாட்டினை உறுதிசெய்யும். தகுந்த நில அமைப்பு, இயற்கை வளம் மற்றும் திறன் கொண்ட பணியாளர் ஆகியவற்றால் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. மேலும் முதலீட்டாளர்களின் சொர்க்க பூமியாக இம்மாநிலம் நீண்டகாலமாக திகழ்கிறது. தமிழ்நாடு அரசு, உள்நாட்டு தொழில் முதலீட்டாளர்களை மாநிலத்தில் முதலீடு செய்ய ஈர்க்கும் வகையிலும், அவர்களுடன் இதற்கென கலந்துரையாடவும் மற்றும் அவர்கள் தங்களின் தொழிலை இம்மாநிலத்தில் விரிவாக்கம் செய்யவும் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புதுடெல்லி ஆகிய நகரங்களில் இத்தகைய ரோட் ஷோக்களை நடத்தியுள்ளது. மேலும், மும்பை, அகமதாபாத், புனே மற்றும் கொல்கத்தா ஆகிய பெருநகரங்களிலும், தமிழ்நாட்டின் ஐந்து முக்கிய நகரங்களிளும் ரோட் ஷோ எனப்படும் கருத்தரங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 1. 8056202050 2. 9952944630 3. 9994212176 என்ற செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.