OPS INAUGURATED FAIR PRO -2020 EXPO AT NANDAMBAKKM    |    Paytm to Empower 1 Million Merchants in Tamil Nadu    |    Lizol for the first time in India, launches a new innovative product designed specially for cement surface    |    Newgen Software extends support to 800 children through remedial education programme in Nandabakkam Higher Secondary School, Sriprembadhur, Chennai    |    திறமைக்கு வாய்ப்பளிக்கும் சமூகமே முன்னேறும்!    |    SRI CHAITANYA GROUP OF SCHOOL WORLD RECORD FEST 2019    |    GADGET FREE DAY CAMPAIGN WITH 100 TWINS HELD AT VELAMMAL    |    AMSTRAD - The next generation consumer electronics brand launches in Tamil Nadu    |    ஆவினில் புதிய பால் பொருட்களை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அறிமுகப்படுத்தினார்.    |    சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |   
Total Visitors : site stats
Apr 15, 2015     |     GO BACK     |     Share
 
 
சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதாதளம், மதசார்பற்ற ஜனதாதளம், இந்திய தேசிய லோக்தளம், சமாஜ்வாதி ஜனதாதளம் ஆகிய ஆறு கட்சிகளும் இன்று புது டெல்லியில் ஒரே கட்சியாக சங்கமம் ஆகின. இந்த புதிய கட்சியின் தலைவராக முலாயம் சிங் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு மாற்றாக வலுவான கட்சி ஒன்றை உருவாக்க சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்ட முன்னாள் ஜனதா பரிவார் தலைவர்கள் தீர்மானித்து உள்ளனர். இதுபற்றி கடந்த 5-ந்தேதி கருத்து தெரிவித்த லாலு பிரசாத், ஒரே கொடி, ஒரே சின்னத்தின் கீழ் ஜனதா பரிவார் கட்சிகள் ஒன்றாக இணைந்து ஒரே கட்சியாக செயல்படும் என்று கூறினார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. 2017-ம் ஆண்டில் உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இந்த இரு மாநிலங்களிலும் பா.ஜனதாவுக்கு பெரிய வெற்றி கிடைத்தது. பா.ஜனதாவின் செல்வாக்கு அதிகரித்து இருப்பது ஜனதா பரிவார் தலைவர்களுக்கு சிறிது கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் அரசியலில் இரு துருவங்களாக செயல்பட்ட லாலு பிரசாத்தும், ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவரும், அந்த மாநில முதல்-மந்திரியுமான நிதிஷ்குமாரும் நெருக்கமாகி இருக்கிறார்கள். பீகார் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கு முன்னதாக புதிய கட்சியை உருவாக்க வேண்டும் என்பதில் ஜனதா பரிவார் தலைவர்கள் மும்முரமாக உள்ளனர். இதுதொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள முலாயம் சிங்கின் இல்லத்தில் இன்று நடைபெற்றது. முலாயம் சிங், லாலு பிரசாத், நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், பொதுச்செயலாளர் கே.சி.தியாகி, முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவேகவுடா ஆகியோருடன் இந்திய தேசிய லோக்தள தலைவர் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்ட தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். நீண்ட நேர ஆலோசனைக்கு பின்னர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த முலாயம் சிங் யாதவ், 'நாங்கள் (6 கட்சிகள்) இன்று ஒன்றிணைந்துள்ளோம். இந்த பந்தம் உறுதியாக இருக்கும் என மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவு. இந்த புதிய கட்சிக்கு தலைவராக என்னை தேர்வு செய்துள்ளனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாங்கள் நடந்து கொள்வோம் என குறிப்பிட்டார். இந்த 6 கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற தலைவராகவும் முலாயம் சிங் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய கட்சியின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்ட விவகாரங்களை இறுதி செய்ய முன்னாள் பிரதமர் தேவேகவுடா, லல்லு பிரசாத் யாதவ், ஓம் பிரகாஷ் சவுதாலா, சரத் யாதவ், ராம் கோபால் யாதவ், கமல் மொராக்கா ஆகிய 6 உறுப்பினர்களை கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் கூடி ஆலோசித்து கட்சியின் பெயர், கொடி, சின்னம் போன்றவற்றை விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.