CENTRE FOR MONOGENIC DIABETES' INAUGURATED AT DR. MOHAN'S DIABETES SPECIALITIES CENTRE    |    Westminster-Cipaca Join Hands to Start COVID -ICU Unit    |    VIJAI TRUCKING HAS BEEN AWARDED THE DEALERSHIP FOR TATA MOTORS COMMERICAIL VEHICLE DIVISION    |    SIMS Hospitals, Vadapalani performs successful Microsurgical Liver Transplant Surgery, a first of its kind in Tamil Nadu    |    Malabar Gold & Diamonds opens New Show Room In Chennai Anna Nagar.    |    TCL CONNECT 2021 , Chennai    |    Satish Dhawan satellite launched by ISRO onboard the PSLV-C51 rocket    |    ‘ONVI.MOVIE’, India’s Exclusively Pay-Per-View OTT for Movies, will be Launched on 5th March 2021    |    ஒருலட்சம் உயிர்களை காப்பாற்றி சிறப்பாக சாதனை -பாராட்டிய ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை    |    தாம்பரம் முடிச்சூர் , அருள்மிகு வினை தீர்த்த விநாயகர் கோவில், பிரசன்ன வெங்கடேசப் பொருமாள் - கும்பாபிஷேகம்    |   
Total Visitors : site stats
Apr 15, 2015     |     GO BACK     |     Share
 
 
திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில், செம்மரங்களை வெட்ட வந்ததாக கூறி 20 தமிழர்களை ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது திட்டமிட்ட படுகொலை என்று கூறப்படுவதால், துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யுமாறு ஆந்திர அரசுக்கு ஐதராபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்துமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆந்திர மாநில அரசுக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அத்துடன் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரின் பட்டியலை வருகிற 22-ந் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறும் கட்டளையிட்டு இருக்கிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் நேரடி சாட்சிகளாக கருதப்படும் சேகர், பாலச்சந்திரன் என்ற இருவர் நேற்று முன்தினம் ஆணையத்தின் முன் ஆஜராகி அளித்த சாட்சியத்தை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 7-ந் தேதி 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் வெளியானதும், அது குறித்து மத்திய உள் துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி நடந்த சம்பவம் பற்றிய விவரங்களை கேட்டு அறிந்தார். அத்துடன் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, ஆந்திர மாநில அரசு இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கை மத்திய அரசுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஆந்திர மாநில அரசின் தலைமைச் செயலாளரை உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. அதை ஏற்று ஆந்திர அரசின் தலைமைச் செயலாளர் கிருஷ்ணா ராவ் நேற்று டெல்லி சென்று மத்திய அரசின் உள்துறை செயலாளர் எல்.சி.கோயலை சந்தித்தார். அப்போது அவர் சில விளக்கங்களை அளித்தார். சில ஆவணங்களையும் தாக்கல் செய்தார். துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய அவசியம் ஏன்? அதற்கு அனுமதி கொடுத்தது யார்? என்று உள்துறை செயலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு கிருஷ்ணா ராவ் பதில் அளித்தார். அதன்பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதற்கிடையே, 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக உண்மை கண்டறியும் குழு ஒன்றை தேசிய பழங்குடியினர் ஆணையம் நியமித்து உள்ளது. இந்த தகவலை அந்த ஆணையத்தின் தலைவர் ராமேஸ்வர் ஓரான் நேற்று டெல்லியில் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆந்திராவில் 20 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்துவதற்காக தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் துணைத்தலைவர் ரவி தாக்கூர் தலைமையில் குழு ஒன்றை அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தும் இந்த குழுவினர் ஆந்திர மாநில அரசின் உயர் அதிகாரிகளுடன் இந்த சம்பவம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்துவார்கள். மேலும் 20 பேர் கொல்லப்பட்டது குறித்து அறிக்கை அனுப்பி வைக்குமாறு ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. இவ்வாறு ராமேஸ்வர் ஓரான் கூறினார்.