OPS INAUGURATED FAIR PRO -2020 EXPO AT NANDAMBAKKM    |    Paytm to Empower 1 Million Merchants in Tamil Nadu    |    Lizol for the first time in India, launches a new innovative product designed specially for cement surface    |    Newgen Software extends support to 800 children through remedial education programme in Nandabakkam Higher Secondary School, Sriprembadhur, Chennai    |    திறமைக்கு வாய்ப்பளிக்கும் சமூகமே முன்னேறும்!    |    SRI CHAITANYA GROUP OF SCHOOL WORLD RECORD FEST 2019    |    GADGET FREE DAY CAMPAIGN WITH 100 TWINS HELD AT VELAMMAL    |    AMSTRAD - The next generation consumer electronics brand launches in Tamil Nadu    |    ஆவினில் புதிய பால் பொருட்களை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அறிமுகப்படுத்தினார்.    |    சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |   
Total Visitors : site stats
Apr 15, 2015     |     GO BACK     |     Share
 
 
தமிழகத்தில் இதுவரை 45 சதவீதம் வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார். இதுகுறித்து நிருபர்களுக்கு, சந்தீப் சக்சேனா அளித்த பேட்டி வருமாறு:- ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான சிறப்பு முகாம்கள் 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 12-ந் தேதி தொடங்கின. இந்த சிறப்பு முகாம்களில் சுமார் 25 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் இருந்து ஆதார் எண், செல்போன் எண், இமெயில் உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டன. தமிழகத்தில் உள்ள 5.62 கோடி வாக்காளர்களில் சிறப்பு முகாம் மூலமாகவும் நேரடியாகவும் இதுவரை 2.4 கோடி வாக்காளர்களின் விவரங்கள், அதாவது சுமார் 45 சதவீதம் பேரின் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் 66.5 லட்சம் பேரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மே 31-ந்தேதி வரை வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக வந்து விவரங்களை பெற்றுக் கொள்வார்கள். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, பெண்ணாகரம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் 100 சதவீதம் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த விவரங்களை பதிவு செய்து உறுதிப்படுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. திருத்தணி தொகுதியில் வாக்காளர்கள் புகைப்படத்தோடு விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. பெண்ணாகரம் தொகுதியில் வாக்காளர்களின் ஆதார் நகல்கள் பெறப்பட்டுள்ளன. பாலக்கோடு தொகுதியில் ஆதார் அட்டைகள், கையடக்க கம்ப்யூட்டர் மூலம் படம் எடுக்கப்பட்டன. இப்படி மூன்று வகைகளில் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்படும் விவரங்களை தனி சாப்ட்வேர் மூலம் சரி பார்ப்போம். புகைப்படம் இல்லாவிட்டாலும், வாக்காளரின் பெயர், இமெயில், முகவரி போன்ற தகவல்களுடன் அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்டு பின்னர் உறுதி செய்யப்படும். தமிழகத்துக்கான தேசிய மக்கள் தொகை பதிவேட்டு விவரங்களை பெற்றிருக்கிறோம். ஆதார் பெறவில்லை என்றாலும், இந்த பதிவேட்டின் அடிப்படையில் பெறப்படும் அவர்களின் விவரங்கள், வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படும். வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி உறுதிப்படுத்தும் திட்டத்தை மே மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் மட்டும் தான் இந்த திட்டம் வேகமெடுத்துள்ளது. மற்ற மாநிலங்களில் இப்போது தான் இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு திட்டப்பணிகள் முடிய ஆகஸ்டு ஆகிவிடும். ஆதார் விவரங்களை, வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்கான சாப்ட்வேரும் நாம் மட்டுமே உருவாக்கியிருக்கிறோம். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், புதுச்சேரி, லட்சத்தீவுகள் போன்ற தென் மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூரில் இந்திய தேர்தல் கமிஷன் துணை ஆணையாளர் தலைமையில் புதன்கிழமை (இன்று) நடைபெறுகிறது. வாக்காளர்களின் விவரங்களை உறுதிப்படுத்துவதற்காகத்தான் செல்போன் எண், இமெயில், ஆதார் எண் ஆகியவை பெறப்படுகின்றன. இந்த விவரங்களை வாக்காளர் பட்டியலில் வைக்க மாட்டோம். எனவே தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை அரசியல் கட்சியினர் அந்த வகைகளில் தொடர்பு கொள்வார்கள் என்று சந்தேகப்பட வேண்டாம். ஒவ்வொரு வாக்காளரின் தனிப்பட்ட விவரங்களும் ரகசியமாகவே வைக்கப்படும். தேர்தல் கமிஷனுக்கும், வாக்காளர்களுக்கும் இடையேயான பரிமாற்றத்துக்காக மட்டும் இந்த விவரங்கள் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.