Chartered Accountant Training Program by Education Department    |    Stroke Awareness Walkathon by SIMS Hospital    |    Bonfiglioli Sets Up a New Facility in Chennai    |    United India Insurance - MEGA INSURANCE ADVISORS MEET AT CHENNAI ON 28/08/2018    |    Vishal 3R Lab innaugurated by Seema Agarwal IPS    |    CII and Grundfos Inaugurate GangaiAmman Koil Kulam (Tank)    |    TUTUCORIN CONTRACTORS ASSOCIATION PRESS MEET REGARDING STERILITE    |    சிறந்த திட்டமிடல் இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும்: வருமான வரித் துறை ஆணையர்    |    IndoStar Capital Finance Limited Offer opens on May 9, 2018    |    Catalyst PR - Receive ISO Certification    |   
Total Visitors : site stats
Apr 14, 2015     |     GO BACK     |     Share
 
 
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் நேற்றுடன் தனது 11வது கட்ட விசாரணையை நிறைவு செய்தார். சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்வதற்காக இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக ஏராளமான ஆதாரங்களை ஆவணங்களாக இணைத்து வருகிறார். முறைகேடு குறித்து ஏராளமான புகார்கள் வந்தாலும், இன்னும் வெளிவராத தகவல்களை ஆதாரங்களுடன் பெற முடியுமா? என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்தநிலையில், சகாயம் ஆய்வின்போது உதவிய ஆள் இல்லாத குட்டி விமானத்தை இயக்கிய பார்த்தசாரதி கார் விபத்தில் இறந்தார். இது தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், நேற்று சகாயத்தை சந்தித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். பார்த்த சாரதி விபத்தில் இறந்துள்ளதாகவும், இதில் வேறு சந்தேகம் ஏதும் எழவில்லை என்றும் அவர் விளக்கமளித்ததாக தெரிகிறது. பி.ஆர்.பி. உள்பட முக்கிய கிரானைட் நிறுவனங்கள் பி.எஸ்.என்.எல். மூலம் ஏராளமான போன் மற்றும் இண்டர்நெட் இணைப்புகளை பெற்றிருந்தன. மேலும் ஏராளமான தொழிலாளர்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ், செல்போன் இணைப்புகளும் கொடுக்கப்பட்டிருந்தது. கிரானைட் கற்கள் வெட்டி எடுத்தது, ஏற்றுமதி செய்தது, நாடு முழுவதும் விற்பனை செய்தது, துறைமுகங்களுக்கு அனுப்பியது உள்ளிட்ட பல்வேறு தகவல் பரிமாற்றங்கள், தொலை தொடர்பு வசதியை பயன்படுத்தி நடந்துள்ளன. இதுகுறித்து இன்னும் முழுமையான தகவல்கள் விசாரணை குழுவுக்கு கிடைக்கவில்லை. கிரானைட் நிறுவனங்கள் மேற்கொண்ட தகவல் பரிமாற்ற விபரங்களை, அவர்கள் பயன்படுத்திய தொலை தொடர்பு நிறுவனங்கள் வாயிலாக, நவீன தொழில்நுட்பம் மூலம் பெற முடியுமா என்பது குறித்து விளக்கம் பெறப்பட்டது. அந்த விளக்கங்களை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் ராஜம் மற்றும் 3 தொழில்நுட்ப வல்லுநர்கள் சகாயத்தை சந்தித்து தெரிவித்தனர். 11வது கட்ட விசாரணையை நேற்றுடன் முடித்துக் கொண்ட சகாயம், அடுத்த கட்ட விசாரணையை வருகிற 16ந் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளார்.