Nano Life First time launching @ T.Nagar,Chennai    |    RISHS INTERNATIONAL SCHOOL 3'rd ANNUAL DAY 05-02-2019    |    Inaugural 64-team BOOST Chennaiyin FC Football Championship announced    |    Dr.Paul Dhinakaran's Family Wedding reception at Vanagaram    |    The 31 Plenary Assembly of the Conference of the Catholic Bishops of India    |    Champions of ALLEN Sharp Exam Felicitated in the SCORE ceremony    |    7Up And Actress Kajal Aggarwal Bring Ponneram to Chennai    |    TAPMA Plans Huge Demonstration on 13th Dec. for Withdrawal of Plastics Ban    |    ALLEN Career Institute launches study centre in Chennai    |    Ford Inaugurates Dhruvan Ford Sales and Service Facility in Chennai    |   
Total Visitors : site stats
Apr 14, 2015     |     GO BACK     |     Share
 
 
இந்திய சுதந்திரத்துக்காக தனியாக ராணுவத்தை ஏற்படுத்தி போராடிய நேதாஜி சுபாஷ்சந்திர போசின் பேரனான சூர்ய குமார் போஸ் ஜெர்மனியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தனது தாத்தாவின் மறைவு தொடர்பாக இந்திய அரசிடம் உள்ள ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிடும்படி கோரிக்கை விடுத்தார். சுதந்திர போராட்டத்தின்போது, 1939-ம் ஆண்டு மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரசில் இருந்து மற்றொரு பிரபல தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விலகினார். பின்னர் அவர் ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்று இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடினார். 1945-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டதாக கூறப்பட்டது. எனினும், அதை நேதாஜியின் குடும்பத்தினரோ, அவருடைய ஆதரவாளர்களோ ஏற்கவில்லை. இந்த விமான விபத்து சம்பவத்துக்கு பின்பு, நேதாஜி சோவியத் ரஷியா நாட்டில் காணப்பட்டதாகவும் கூறப்படுவது உண்டு. இதனால் நேதாஜி இறந்தாரா, உயிரோடு இருக்கிறாரா? என்ற சர்ச்சை அண்மைக்காலம் வரை நீடித்து வருகின்றது. மத்திய அரசால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்டுவரும் வரும் நேதாஜியைப் பற்றிய 100-க்கும் மேற்பட்ட ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிடவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதே கோரிக்கையை பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. எனினும், இவற்றை வெளியிட்டால், மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், நமது நட்பு நாடுகள் சிலவற்றுடன் உறவுகள் பாதிக்கப்படும் என்பதால் அந்த கோப்புகள் பகிரங்கமாக வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், நேதாஜியின் நெருங்கிய உறவினர்களான சிசிர்குமார் போஸ் (நேதாஜியின் சகோதரர் மகன்), அமியாநாத் போஸ், அவருடைய ஜெர்மனி நாட்டு மனைவி எமிலி சூசென்கல் ஆகியோர் 1948-ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த காலம் முதல் 1968-ம் ஆண்டு வரை உளவு பார்க்கப்பட்டதாக சமீபத்தில் வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு தலைநகர் பெர்லினில் உள்ள இந்திய தலைமை தூதரகம் நேற்றிரவு விருந்து அளித்தது. அங்குள்ள முக்கிய இந்திய பிரமுகர்கள் சிலரும் பங்கேற்றனர். அவ்வகையில், இங்குள்ள ஹம்பர்க் நகரில் இயங்கிவரும் இந்திய-ஜெர்மனி சங்கத்தின் தலைவரும் நேதாஜியின் பேரனுமான சூர்ய குமார் போஸ் இந்த விருந்தில் கலந்து கொண்டார். விருந்துக்கு பின்னர் பிரதமர் மோடியை தனியே சந்தித்த சூர்ய குமார் போஸ், நேதாஜியின் மறைவு தொடர்பாக இந்திய அரசிடம் உள்ள ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிடும்படி கோரிக்கை விடுத்தார். அதுமட்டுமின்றி, நேரு பிரதமராக இருந்த காலத்தில் நேதாஜியின் குடும்பத்தார் உளவு பார்க்கப்பட்டதாக சமீபத்தில் வெளியான தகவல்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மையை உலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்த மோடி, தானும் அவ்வாறே விரும்புவதாகவும் இது தொடர்பாக கவனிப்பதாகவும் கூறியதாக இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூர்ய குமார் போஸ் தெரிவித்துள்ளார்.