சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
Apr 13, 2015     |     GO BACK     |     Share
 
 
கென்யா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு பீதியில் உயிர் தப்பிக்க நினைத்த மாணவர்கள் மாடியில் இருந்து குதித்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்த 141 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 2-ந்தேதி கென்யாவின் கரிஸ்ஸா பல்கலைக்கழத்தில் தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார்கள். இதில், 148 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்னும் இந்த அதிர்ச்சியில் இருந்து அந்நாட்டு மாணவர்கள் வெளியேறவில்லை. இந்நிலையில், நேற்று காலை நைரோபி பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரீகல் டிரான்ஸ்பார்மர் ஒன்று திடீரென வெடித்தது. அப்போது பல்கலைக்கழகத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். டிரான்ஸ்பார்மர் வெடித்த சத்தத்தை குண்டு வெடித்ததாக மாணவர்கள் தவறாக புரிந்து கொண்டனர். எனவே தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மாணவர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். பல மாணவர்கள் மாடியில் இருந்து குதித்து வெளியேற முயற்சித்தனர். இதனால், மாணவர்களுக்கிடையே பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உயிர் ஆசையில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல ஓடியதால் பல மாணவர்கள் தவறிக் கீழே விழுந்தனர். அவர்கள் மீது மற்ற மாணவர்கள் மிதித்துக் கொண்டு ஓடினர். இதில் 141 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதேபோல், 5வது மாடியில் இருந்து குதித்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நைரோபி பல்கலைக்கழக துணைவேந்தர் பீட்டர் பிதி கூறுகையில், எலக்ட்ரீக்கல் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பொறி கிளம்பியது. இது தவறுதலாக வெடிகுண்டு வெடித்ததாக பீதி கிளம்பியது. இதனால் மாணவர்கள் பதறி அடித்து ஓடியுள்ளனர். 3-ம் ஆண்டு மாணவர் ஒருவர் 5-வது மாடியில் இருந்து குதித்துள்ளார். பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனயைில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். மேலும், சிலர் 6-வது மாடியில் இருந்து குதித்துள்ளனர். அவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்'' என்றார்.