CENTRE FOR MONOGENIC DIABETES' INAUGURATED AT DR. MOHAN'S DIABETES SPECIALITIES CENTRE    |    Westminster-Cipaca Join Hands to Start COVID -ICU Unit    |    VIJAI TRUCKING HAS BEEN AWARDED THE DEALERSHIP FOR TATA MOTORS COMMERICAIL VEHICLE DIVISION    |    SIMS Hospitals, Vadapalani performs successful Microsurgical Liver Transplant Surgery, a first of its kind in Tamil Nadu    |    Malabar Gold & Diamonds opens New Show Room In Chennai Anna Nagar.    |    TCL CONNECT 2021 , Chennai    |    Satish Dhawan satellite launched by ISRO onboard the PSLV-C51 rocket    |    ‘ONVI.MOVIE’, India’s Exclusively Pay-Per-View OTT for Movies, will be Launched on 5th March 2021    |    ஒருலட்சம் உயிர்களை காப்பாற்றி சிறப்பாக சாதனை -பாராட்டிய ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை    |    தாம்பரம் முடிச்சூர் , அருள்மிகு வினை தீர்த்த விநாயகர் கோவில், பிரசன்ன வெங்கடேசப் பொருமாள் - கும்பாபிஷேகம்    |   
Total Visitors : site stats
Apr 13, 2015     |     GO BACK     |     Share
 
 
ஜனாதிபதி அனுமதியின்றி வெளி மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லக்கூடாது என்று மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு விதித்து உள்ளது. மாநில ஆளுநர்கள் நியமிக்கப்படும்போது அவர்கள் சொந்த மாநிலங்களில் நியமிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக ஆளுநர்கள் அவ்வப்போது தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ பயணமாகி விடுகிறார்கள். சில ஆளுநர்கள் தாங்கள் பதவி வகிக்கும் மாநிலங்களுக்கு உடனடியாக திரும்புவதும் இல்லை. வெகு நாட்கள் அங்கேயே தங்கி விடுகிறார்கள். இதைத் தடுப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஆளுநர்களுக்கு 18 திடீர் கட்டுப்பாடுகளை பிறப்பித்து உத்தரவிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: அவசர மற்றும் அசாதாரண சூழல்நிலைகள் தவிர, ஆளுநர்கள் ஜனாதிபதியின் முன் அனுமதி இல்லாமல் வெளி மாநிலங்களுக்கு எந்த பயணமும் மேற்கொள்ளக் கூடாது. ஒருவேளை கடைசி நிமிடத்தில் முடிவெடுக்கப்பட்டு பயணம் மேற்கொள்ள நேர்ந்தால், அந்த கட்டாய பயணத்திற்கான காரணத்தை ஆளுநர்கள் விளக்கவேண்டும். ஆளுநர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்லவேண்டும் என்றால், பயண தேதியின் ஒருவாரம் முதல் 6 வாரத்துக்கு இடைப்பட்ட காலத்துக்குள் அதுபற்றிய தகவலை ஜனாதிபதியின் செயலாளருக்கு தெரியப்படுத்தவேண்டும். தவிர அது அரசு முறை பயணமா? அல்லது சொந்த பயணமா? என்பதையும், அந்த பயணம் இந்தியாவிற்கு உள்ளா? அல்லது வெளிநாட்டிலா? என்பதையும் ஜனாதிபதியின் செயலாளருக்கு ஆளுநர்கள் தெரிவிக்கவேண்டும். மாநில ஆளுநர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் பதவி வகிக்கும் மாநிலங்களில் குறைந்த பட்சம் 292 நாட்கள் தங்கி இருப்பதை உறுதி செய்யவேண்டும். ஆண்டுக்கு 20 சதவீத நாட்கள் (அதாவது 73 நாட்கள்) மட்டுமே வேறு மாநில அல்லது வெளிநாட்டு பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். வெளிநாடுகளுக்கு பயணம் செல்வது என்றால் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு 6 வாரங்களுக்கு முன்பாகவே அது தொடர்பான தகவலை தெரிவித்து அதற்கு ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறவேண்டும். வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக அன்னிய பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட அனுமதி மற்றும் அரசியல் ரீதியான அனுமதியை பெறவேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. மேலும், ஆளுநர்கள் ஒவ்வொரு முறை அனுமதி கோருவதும் பிரதமரின் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா மற்றும் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரால் குறித்துக்கொள்ளப்படும் என்றும் இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சில ஆளுநர்கள் தங்களுக்கு அளிக்கப்படும், சிறப்பு உரிமைகளை பல்வேறு நேரங்களில் தவறாக பயன்படுத்திக்கொள்வது தெரிய வந்துள்ளதால் இந்த கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.