சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
Apr 10, 2015     |     GO BACK     |     Share
 
 
2015ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் கடந்த 8-ந்தேதி நடந்தது. இந்த விழாவில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், இளவரசர் கரீம் ஆகா கான், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலா ஜெயின் கோயிலைச் சேர்ந்த டி. வீரேந்திர ஹெக்கடே, பிரபல அணு விஞ்ஞானி பேராசிரியர் மாலூர் ராமசாமி ஸ்ரீனிவாசன் உள்பட 6 பேருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது. பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். இந்த நிழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் ஹமித் அன்சாரி, பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் ஜேட்லி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரி வால் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமிதாப்பச்சனின் குடும்பம் முழ்வதும் கலந்து கொண்டது அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், இவரது மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் அமிதாப்பச்சனின் பேத்தி நவ்யா நவெளி நந்தாவும் கலந்து கொண்டார். இவர் அமிதாபச்சனின் மகள் சுவேதா அவரது கணவர் நிகில் நந்தாவின் மகளாவார். நவ்யா ஒரு எம்ப்ராய்ட்ரி போட்ட சாம்பெயின் பிங்க் கலரில் சுடிதார் அணிந்து இருந்தார். அதில் நுட்பமா படங்கள் இருந்தது. நவ்யா தனது தாத்தா விருது வாங்குவதையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டும் தனது பாட்டி ஜெயா பச்சனுடனும் மாமா அபிஷேக் பச்சனுடனும் மாமி ஐஸ்வர்யா ராயுடனும் பேசிக்கொண்டு இருந்தார்.நவ்யாவுக்கு அக்ஸ்தியா என்ற இளைய சகோதரர் ஒருவர் இருக்கிறார்.இவர் புகழ்பெற்ற நடிகர் ராஜ்கபூரின் கொள்ளுபேத்தியும் ஆவார். நவ்யா தற்போது லண்டனில் உள்ள மதிப்பு மிக்க செவன் ஓக்ஸ் பள்ளியில் படித்து வருகிறார். இதே பள்ளியில் தான் நடிகர் ஷாருகான் மகனும் படிக்கிறார்.