CENTRE FOR MONOGENIC DIABETES' INAUGURATED AT DR. MOHAN'S DIABETES SPECIALITIES CENTRE    |    Westminster-Cipaca Join Hands to Start COVID -ICU Unit    |    VIJAI TRUCKING HAS BEEN AWARDED THE DEALERSHIP FOR TATA MOTORS COMMERICAIL VEHICLE DIVISION    |    SIMS Hospitals, Vadapalani performs successful Microsurgical Liver Transplant Surgery, a first of its kind in Tamil Nadu    |    Malabar Gold & Diamonds opens New Show Room In Chennai Anna Nagar.    |    TCL CONNECT 2021 , Chennai    |    Satish Dhawan satellite launched by ISRO onboard the PSLV-C51 rocket    |    ‘ONVI.MOVIE’, India’s Exclusively Pay-Per-View OTT for Movies, will be Launched on 5th March 2021    |    ஒருலட்சம் உயிர்களை காப்பாற்றி சிறப்பாக சாதனை -பாராட்டிய ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை    |    தாம்பரம் முடிச்சூர் , அருள்மிகு வினை தீர்த்த விநாயகர் கோவில், பிரசன்ன வெங்கடேசப் பொருமாள் - கும்பாபிஷேகம்    |   
Total Visitors : site stats
Apr 9, 2015     |     GO BACK     |     Share
 
 
சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் வழக்கில் ராமலிங்க ராஜூ உள்பட 10 பேர் குற்றவாளிகள் என்று சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வரவு செலவு கணக்கில், பல ஆண்டுகளாக மோசடி செய்து, லாபத்தை அதிகமாக காட்டி ஊழலில் ஈடுபட்டதாக அதன் தலைவர் பி. ராமலிங்க ராஜூ மீது கடந்த 2009ம் ஆண்டு புகார் எழுந்தது. நாட்டின் மிகப்பெரிய கணக்கு மோசடி என கூறப்பட்ட இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. ராமலிங்க ராஜூ, அவரது சகோதரர்கள் ராம ராஜூ, சூரிய நாராயண ராஜூ, சத்யம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சீனிவாஸ் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஐதராபாத் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விசாரணை நடத்தியது. சத்யம், தனது பங்குதாரர்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. 226 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 3 ஆயிரம் ஆவணங்கள் சான்றாவணங்களாக குறிக்கப்பட்டன. இன்று தீர்ப்பு வழங்கிய சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் வழக்கில் ராமலிங்க ராஜூ உள்பட 10 பேர் குற்றவாளிகள் என்று அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை விபரம் நாளை அறிவிக்கப்படும் என்று கோர்ட்டு தெரிவித்து உள்ளது. சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் வழக்கில் இவர்கள் கிரிமினல் சதிதிட்டம் தீட்டியதாகவும், ஏமாற்றியதாகவும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.