Stroke Awareness Walkathon by SIMS Hospital    |    Bonfiglioli Sets Up a New Facility in Chennai    |    United India Insurance - MEGA INSURANCE ADVISORS MEET AT CHENNAI ON 28/08/2018    |    Vishal 3R Lab innaugurated by Seema Agarwal IPS    |    CII and Grundfos Inaugurate GangaiAmman Koil Kulam (Tank)    |    TUTUCORIN CONTRACTORS ASSOCIATION PRESS MEET REGARDING STERILITE    |    சிறந்த திட்டமிடல் இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும்: வருமான வரித் துறை ஆணையர்    |    IndoStar Capital Finance Limited Offer opens on May 9, 2018    |    Catalyst PR - Receive ISO Certification    |    UBM India announces the maiden edition of The Chennai Jewellery and Gem Fair    |   
Total Visitors : site stats
Apr 8, 2015     |     GO BACK     |     Share
 
 
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த 18.11.14 அன்று வெளியிட்ட அரசாணைப்படி தமிழகத்தில் உள்ள சுயநிதி தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் ஓட்டல் மேனேஜ்மெண்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி கல்வி நிறுவனங்களுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையில் கல்வி கட்டண குழுவை நிர்ணயித்து ஆணையிடப்பட்டுள்ளது. கல்வி கட்டண நிர்ணயக் குழு கூட்டம் பல்வேறு கால கட்டங்களில் கூடி, கல்லூரிகள் சமர்ப்பித்த விவரங்கள், ஆய்வு குழு சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கை, கல்லூரி நிர்வாகத்தின் கருத்துருக்கள், சுயநிதி கல்லூரிகளின் கூட்டமைப்பு நிர்வாகிகளின் கருத்துருக்கள் ஆகியவற்றை பரிசீலித்து கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. இந்த கல்வி கட்டணம் 2015-16, 2016-17 ஆகிய கல்வி ஆண்டுகளுக்கு பொருந்தும். பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புக்கு அதிகபட்சமாக செமஸ்டர் ஒன்றுக்கு ஒரு மாணவனிடம் ரூ.15 ஆயிரம் வசூலிக்கலாம். டியூசன் கட்டணம், சேர்க்கை கட்டணம், சிறப்பு கட்டணம், ஆய்வுக்கூடம், கம்ப்யூட்டர், இன்டர்நெட் கட்டணம், விளையாட்டு கட்டணம், பயிற்சி கட்டணம், பராமரிப்பு கட்டணம் உள்பட எல்லாவற்றையும் உள்ளடக்கிய கட்டணம் இதுவாகும். அதுபோல, ஓட்டல் மேனேஜ்மெண்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ படிப்புக்கு, ஒரு செமஸ்டருக்கு ஒரு மாணவனிடம் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் மட்டும் வசூலிக்கலாம். டியூசன் கட்டணம், சேர்க்கை கட்டணம், சிறப்பு கட்டணம், ஆய்வுக்கூடம், கம்ப்யூட்டர், இன்டர்நெட் கட்டணம், விளையாட்டு கட்டணம், பயிற்சி கட்டணம், பராமரிப்பு கட்டணம் உள்பட எல்லாவற்றையும் உள்ளடக்கிய கட்டணம் இதுவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.