CENTRE FOR MONOGENIC DIABETES' INAUGURATED AT DR. MOHAN'S DIABETES SPECIALITIES CENTRE    |    Westminster-Cipaca Join Hands to Start COVID -ICU Unit    |    VIJAI TRUCKING HAS BEEN AWARDED THE DEALERSHIP FOR TATA MOTORS COMMERICAIL VEHICLE DIVISION    |    SIMS Hospitals, Vadapalani performs successful Microsurgical Liver Transplant Surgery, a first of its kind in Tamil Nadu    |    Malabar Gold & Diamonds opens New Show Room In Chennai Anna Nagar.    |    TCL CONNECT 2021 , Chennai    |    Satish Dhawan satellite launched by ISRO onboard the PSLV-C51 rocket    |    ‘ONVI.MOVIE’, India’s Exclusively Pay-Per-View OTT for Movies, will be Launched on 5th March 2021    |    ஒருலட்சம் உயிர்களை காப்பாற்றி சிறப்பாக சாதனை -பாராட்டிய ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை    |    தாம்பரம் முடிச்சூர் , அருள்மிகு வினை தீர்த்த விநாயகர் கோவில், பிரசன்ன வெங்கடேசப் பொருமாள் - கும்பாபிஷேகம்    |   
Total Visitors : site stats
Apr 7, 2015     |     GO BACK     |     Share
 
 
தெலுங்கானாவில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சித்ததாக 5 தீவிரவாதிகள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டதாக 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வாரங்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த தீவிரவாதிகள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் உல் ஜிஹாதி இஸ்லாமி இயக்கத்தின் ஆதரவு பெற்ற தெஹ்ரீக் கலாபா இ இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களில் முக்கியமானவன் விகரூதீன், குஜராத் முதல்வராக இருந்த போது நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியவன். ஹைதராபாத்தில் தொடர் தாக்குதல்களையும் பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை படுகொலை செய்யவும் இவன் திட்டம் தீட்டியிருந்தான். இத்தீவிரவாதிகள் 5 பேரும் இன்று வாரங்கல் சிறையில் இருந்து ஹைதராபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்த அழைத்துவரப்பட்டனர். அப்போது போலீசாரைத் தாக்கி ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு தப்பி ஓட அனைவரும் முயற்சித்துள்ளனர். இந்த மோதலில்தான் 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட விகரூதீன், சையத் அம்ஜத், ஹனீப், ஜாஹிர் மற்றும் இர்பான் அலி ஆகிய அனைவருமே தெஹ்ரீக் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 5 பேரையும் வாரங்கல் சிறையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றுவதற்காக போலீசார் அழைத்து வந்துள்ளனர்.