Vishal 3R Lab innaugurated by Seema Agarwal IPS    |    CII and Grundfos Inaugurate GangaiAmman Koil Kulam (Tank)    |    TUTUCORIN CONTRACTORS ASSOCIATION PRESS MEET REGARDING STERILITE    |    சிறந்த திட்டமிடல் இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும்: வருமான வரித் துறை ஆணையர்    |    IndoStar Capital Finance Limited Offer opens on May 9, 2018    |    Catalyst PR - Receive ISO Certification    |    UBM India announces the maiden edition of The Chennai Jewellery and Gem Fair    |    Vibrant Tamilnadu Food Expo 12-15 August @ Madurai    |    Get Endo 2018 Conference on Obstetrics & Gynaecology    |    600 Healthcare Experts will attend CAHOCON 2018    |   
Total Visitors : site stats
Apr 4, 2015     |     GO BACK     |     Share
 
 
தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்-துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் சென்னையில், 11-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க. பொருளாளரும், இளைஞரணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. இளைஞரணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை தேர்வு செய்திட, தி.மு.க. இளைஞரணி அன்பகம் அலுவலகத்தில் மாவட்ட வாரியாக நேர்காணல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாவட்ட, மாநகர மற்றும் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மும்பை, அந்தமான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளவர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்துக்கு 17-ந்தேதி காலை 9 மணிக்கும், திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் தெற்கு, சென்னை தெற்கு, சென்னை மேற்கு, சென்னை கிழக்கு, சென்னை வடக்கு மாவட்டங்களுக்கு அன்றைய தினம் மாலை 4 மணிக்கும் நேர்காணல் நடைபெறும். நேர்காணல் நிகழ்ச்சிக்கு வரும்போது, அனைவரும் தங்களது பிறப்புச்சான்று(ஒரிஜினல்), தி.மு.க. அறிவித்த போராட்டங்களில் பங்கேற்ற விவரம், குடும்பத்தினர் எவரேனும் தி.மு.க.வில் பொறுப்பு வகித்திருந்தால் அதன் விவரம், ஆற்றியுள்ள கழக பணிகளின் விவரங்களையும் அவசியம் எடுத்து வர வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.