Stroke Awareness Walkathon by SIMS Hospital    |    Bonfiglioli Sets Up a New Facility in Chennai    |    United India Insurance - MEGA INSURANCE ADVISORS MEET AT CHENNAI ON 28/08/2018    |    Vishal 3R Lab innaugurated by Seema Agarwal IPS    |    CII and Grundfos Inaugurate GangaiAmman Koil Kulam (Tank)    |    TUTUCORIN CONTRACTORS ASSOCIATION PRESS MEET REGARDING STERILITE    |    சிறந்த திட்டமிடல் இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும்: வருமான வரித் துறை ஆணையர்    |    IndoStar Capital Finance Limited Offer opens on May 9, 2018    |    Catalyst PR - Receive ISO Certification    |    UBM India announces the maiden edition of The Chennai Jewellery and Gem Fair    |   
Total Visitors : site stats
Apr 3, 2015     |     GO BACK     |     Share
 
 
பா.ம.க. நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் சென்னை மந்தைவெளியில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, கே.என்.சேகர், மு.ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 2016ம் ஆண்டு ஆட்சி மாற்றம் மற்றும் தமிழக முன்னேற்றம் குறித்து நிர்வாகிகளின் கருத்தை டாக்டர் ராமதாஸ் கேட்டறிந்தார். முன்னதாக அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: புகையிலை உபயோகப் டுத்துவதால் புற்றுநோய் வராது என பாரதீய ஜனதா எம்.பி கூறியிருப்பது தவறானது. இந்தியாவில் புகையிலை உபயோகப்படுத்துவதால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இறந்து போகிறார்கள். புகையிலையினால் நுரையீரல் பாதிப்பு, புற்று நோய், மூளை பாதிப்பு ஏற்படுகிறது. புகையிலையை தடை செய்யக் கோரி பிரதமரிடம் நாங்கள் ஏற்கனவே கடிதம் எழுதியிருக்கிறோம். அவரிடம் நேரில் வலியுறுத்தவும் தயாராக உள்ளோம். நெல்லை வேளாண்மை அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை சம்பவம் அமைச்சர், மற்றும் அதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக நடந்து உள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். 2016ம் ஆண்டு பா.ம.க. தனித்து போட்டியிடும். இதில் தி.மு.க., அ.தி.மு.க. தவிர்த்து பல கட்சிகள் எங்கள் அணியில் சேரும். மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் இதுவரை நடத்தப்பட வில்லை. ஆனால் கர்நாடகாவில் 3 முறை கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.