Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |    Nano Life First time launching @ T.Nagar,Chennai    |    RISHS INTERNATIONAL SCHOOL 3'rd ANNUAL DAY 05-02-2019    |    Inaugural 64-team BOOST Chennaiyin FC Football Championship announced    |    Dr.Paul Dhinakaran's Family Wedding reception at Vanagaram    |    The 31 Plenary Assembly of the Conference of the Catholic Bishops of India    |   
Total Visitors : site stats
Mar 16, 2015     |     GO BACK     |     Share
 
 
தமிழக அரசு சார்பில் 1ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவமாணவிகளுக்காக இந்த ஆண்டு 4.50 கோடி புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. இதில் 3 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவமாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு விற்பனைக்காக 135 கோடி புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணி நிறுவனம் சார்பில் பள்ளிகளுக்கான புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. இதற்காக 96 நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை முதல் பருவ புத்தகங்கள், பிளஸ்2, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன. கோடை விடுமுறையில் மாணவமாணவிகள் படிப்பதற்கு வசதியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவமாணவிகளுக்கு 201516ம் கல்வி ஆண்டுக்கான புத்தகங்களை முன்னதாகவே வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்து உள்ளது. இந்த ஆண்டு மே முதல் வாரத்திற்குள் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் தொடங்கும் ஜூன் மாதம் முதல் வாரம்தான் மாணவர்களுக்கு அரசு புத்தகங்கள் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு மே மாதம் முதல் வாரத்திலேயே புத்தகங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்2 வகுப்பு மாணவர்ளுக்கான 85 சதவீத புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன. இவை தற்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. விரைவில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளன. தேர்வுகள் முடிவு தெரிந்ததும் இவை மாணவமாணவிகளுக்கு வினியோகம் செய்யப்படும். இதுபோல் 10ம் வகுப்பு புத்தகங்களும் மே மாதத்திலேயே வினியோகம் செய்யும் வகையில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட உள்ளன. இது போல் தனியார் பள்ளி மாணவமாணவிகளுக்கான புத்தகங்கள் வட்டார விற்பனை மையங்களுக்கு அனுப்பப்பட உள்ளன என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.