Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |    Nano Life First time launching @ T.Nagar,Chennai    |    RISHS INTERNATIONAL SCHOOL 3'rd ANNUAL DAY 05-02-2019    |    Inaugural 64-team BOOST Chennaiyin FC Football Championship announced    |    Dr.Paul Dhinakaran's Family Wedding reception at Vanagaram    |    The 31 Plenary Assembly of the Conference of the Catholic Bishops of India    |   
Total Visitors : site stats
Mar 7, 2015     |     GO BACK     |     Share
 
 
பிரிட்டனை சேர்ந்த மூன்று மாணவிகள் சிரியா சென்றதை தடுத்து நிறுத்துவதற்கு, போலீசார் எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று மாணவிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிரியா, ஈராக் நாட்டில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள், தனிப்பட்ட அரசை நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் உலக நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் சேர்வது வழக்கமாக உள்ளது. அங்கு சென்று கொடுமை தாங்காமல், அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பவேண்டும் அலறும்நிலையில் மீண்டும் அங்கே ஜிகாதிகள் செல்வது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பிரிட்டனை சேர்ந்த 15 வயதுக்கு குறைவான மாணவிகள் 3 பேர் சிரியாவிற்கு சென்றுள்ளனர். அவர்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணை சென்றனர் என்று தெரியவந்துள்ளது. மாணவிகள் லண்டனில் இருந்து துருக்கி சென்று, அங்கிருந்து எல்லையை தாண்டி ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள சிரியாவிற்குள் நுழைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மாணவிகள் சிரியா சென்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்துள்ள மாணவிகளின் பெற்றோர் லண்டன் போலீசை குற்றம் சாட்டியுள்ளனர். மாணவிகள் மாயமாவதற்கு முன்னதாக எங்களுக்கு முக்கிய தகவல்களை போலீசார் வழங்கவில்லை என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர். பிரிட்டனை சேர்ந்த மாணவிகள் ஷாமிமா, அமிரா மற்றும் காதிஜா ஆகியோரே சிரியா சென்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 15-வயது மாணவி ஒருவர் சிரியா சென்று தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார். மாணவி காணாமல் போனது தொடர்பாக ஸ்காட்லாந்து போலீசார் விசாரணை நடத்தினர். மாணவியின் தோழிகளிடமும் விசாரணை நடத்தினர். இந்த மாணவியின் நெருங்கிய தோழிகள் பட்டியலில் ஷாமிமா, அமிரா மற்றும் காதிஜாவும் அடங்குவர். மாணவிகளிடம் இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கை பெறுவதற்காக, அனுமதி கேட்டு போலீசார் மாணவிகளின் பெற்றோர்களுக்கு உங்களது மகள்களுக்கு தீவிரவாத இயக்கத்தில் இணைந்த மாணவியுடன் நட்பு உள்ளது என்று கடிதம் எழுதியுள்ளனர். போலீசார் கடிதத்தை பெற்றோர்களிடம் கொடுப்பதற்கு பதிலாக, மாணவிகளிடமே கொடுத்துள்ளனர். மாணவிகள் அதனை தங்களது புத்தகத்தில் மறைத்து, தங்களது அரையிலே வைத்துவிட்டனர். பின்னர் அவர்கள் விமானம் மூலம் துருக்கி சென்றனர் என்று தெரியவந்துள்ளது. எனவே போலீசார் எங்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை என்றும், தகவல் தெரிவித்து இருந்தால் எங்களது மகள்களை தடுத்து நிறுத்தி இருப்போம் என்றும் தெரிவித்து உள்ளனர். மாணவிகள் அனைவருமே நல்லவர்கள் என்றும், அவர்களுக்கு தீவிரவாத இயக்கத்தில் இணைய பணம் எவ்வாறு கிடைத்தது என்றும் தெரியவில்லை என்று அவர்களது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த பேட்டி விவரம் கார்டியனில் வெளியிடப்பட்டுள்ளது.