சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
Mar 7, 2015     |     GO BACK     |     Share
 
 
1000 ஆண்டுகளுக்கு முன்னர் புதைந்து போன நகரம் ஒன்று ஹோண்டுராஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள மஸ்கியூடியா பகுதியின் அடர்ந்த வனப்பகுதியில், மண்ணுக்குள் புதைந்த பழங்கால நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லிடார் என்ற அதிநவீன முறையில் விண்ணில் இருந்து கதிர்வீச்சுகளை பாய்ச்சி அந்த நகரத்தை கண்டுபிடித்துள்ளனர். இது கி.பி. 1000வது ஆண்டு முதல் 1400 ஆண்டு வரை இருந்திருக்க வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு மண்ணுக்குள் புதைந்த பிரமிடுகளும், அதில் புதைக்கப்பட்டவர்களின் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த நகரத்தில் மனிதர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்திருக்கின்றனர் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நகரத்துக்கு வெள்ளை நகரம் அல்லது குரங்கு கடவுள் நகரம் என பெயரிடப்பட்டுள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதையுண்ட நகரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஹோண்டுராஸ் அரசு ஈடுபட்டுள்ளது.