Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |    Nano Life First time launching @ T.Nagar,Chennai    |    RISHS INTERNATIONAL SCHOOL 3'rd ANNUAL DAY 05-02-2019    |    Inaugural 64-team BOOST Chennaiyin FC Football Championship announced    |    Dr.Paul Dhinakaran's Family Wedding reception at Vanagaram    |    The 31 Plenary Assembly of the Conference of the Catholic Bishops of India    |   
Total Visitors : site stats
Mar 5, 2015     |     GO BACK     |     Share
 
 
கோவையில் இன்று கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக தலைவர் அமித் ஷா, தேர்தல் ஊழல்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று கூறினார். கோவையில் இன்று நடைபெற்ற பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அமித் ஷா, "தமிழகத்தில் தேர்தல் முறைகேடுகளை, ஊழல்களைத் தடுக்க பாஜக-வை வலுவாக்குவது அவசியம். இதனால் மட்டுமே தமிழகத்தில் மாற்றம் ஏற்படுத்த முடியும். தேர்தல் சமயங்களில் பணம் ஒரு பெரிய பங்காற்றுவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதனைத் தடுக்க பாஜக-வை வலுப்பெறச் செய்ய வேண்டும். அதாவது வாக்குச்சாவடிகளில் பாஜக-வை வலுப்படுத்த வேண்டும். இதன் மூலம் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் அளிப்பதைத் தடுக்க முடியும். என்று கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய உறுப்பினர் சேர்க்கையில் பாஜக இதுவரை 6.2 கோடி பேரை சேர்த்துள்ளது என்றும் மார்ச் 31ஆம் தேதிக்குள் 10 கோடி பேரை தேசிய அளவில் உறுப்பினர்களாக சேர்க்கும் இலக்கு நிறைவேறும் என்றும் அவர் கூறியதாகத் தெரிகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இலக்கு 60 லட்சம், இதுவரை 22 லட்சம் கடந்துள்ளது என்று கூறியுள்ளார். இந்தக் கூட்டத்தில் அனைத்திந்திய பாஜக செயலர் முரளிதர் ராவ், தேசியச் செயலர் எச்.ராஜா, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.