சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
Mar 5, 2015     |     GO BACK     |     Share
 
 
திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்காலை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான பொங்காலை விழா இன்று காலை நடைபெற்றது. முதலில் பகவதியம்மனுக்கு விஷேச பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு தீபாராதனை காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் முன்பு உள்ளே அடுப்பில் தந்திரி தினேஷ் தீ மூட்டினார். இதைத்தொடர்ந்து பெண்கள் பொங்கலிட்டனர். கோவில் வளாகம், திருவனந்தபுரம் ரெயில் நிலையம், பஸ் நிலையம் பகுதி உள்பட திருவனந்தபுரம் நகர் முழுவதும் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடுப்பு வைத்து பொங்கலிடப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு பகவதியம்மனை வழிபட்டனர். இந்த விழாவில் கேரள மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பெண்கள் கேரள பாரம்பரிய உடையுடன் பங்கேற்று பகவதியம்மனுக்கு பொங்கல் வைத்தனர். பொங்காலை விழாவையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருந்தே முதலே திருவனந்தபுரம் நகர் முழுவதும் செங்கல் மூலம் அடுப்பு அமைத்து பெண்கள் இடம் பிடித்து இருந்தனர். நேற்று இரவு முழுவதும் பெண் பக்தர்கள் திருவனந்தபுரம் வீதிகளில் காத்திருந்து இன்று காலை பொங்கலிட்டனர். பொங்காலை விழாவையொட்டி இன்று திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது. மேலும் கோவில் மற்றும் சுற்று பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.