NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |    Nano Life First time launching @ T.Nagar,Chennai    |    RISHS INTERNATIONAL SCHOOL 3'rd ANNUAL DAY 05-02-2019    |    Inaugural 64-team BOOST Chennaiyin FC Football Championship announced    |    Dr.Paul Dhinakaran's Family Wedding reception at Vanagaram    |    The 31 Plenary Assembly of the Conference of the Catholic Bishops of India    |    Champions of ALLEN Sharp Exam Felicitated in the SCORE ceremony    |    7Up And Actress Kajal Aggarwal Bring Ponneram to Chennai    |   
Total Visitors : site stats
Feb 27, 2015     |     GO BACK     |     Share
 
 
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ். இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், பள்ளி வளாகத்துக்குள் அண்மை காலங்களில் வன்முறை சம்பவங்கள் ஏராளமாக நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியை ஒருவரை மாவணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் சென்னையில் நடந்தது. அதுபோல கிருஷ்ணகிரியில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் கொடுமை செய்துள்ளார். இதுபோன்ற ஏராளமான சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடந்துள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை மனுவை அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என்னுடைய மனுவை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை 2 மாதத்துக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்