Bonfiglioli Sets Up a New Facility in Chennai    |    United India Insurance - MEGA INSURANCE ADVISORS MEET AT CHENNAI ON 28/08/2018    |    Vishal 3R Lab innaugurated by Seema Agarwal IPS    |    CII and Grundfos Inaugurate GangaiAmman Koil Kulam (Tank)    |    TUTUCORIN CONTRACTORS ASSOCIATION PRESS MEET REGARDING STERILITE    |    சிறந்த திட்டமிடல் இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும்: வருமான வரித் துறை ஆணையர்    |    IndoStar Capital Finance Limited Offer opens on May 9, 2018    |    Catalyst PR - Receive ISO Certification    |    UBM India announces the maiden edition of The Chennai Jewellery and Gem Fair    |    Vibrant Tamilnadu Food Expo 12-15 August @ Madurai    |   
Total Visitors : site stats
Feb 20, 2015     |     GO BACK     |     Share
 
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சட்டசபை என்பது தமிழக மக்கள் பிரச்சனையை பேசவும், அதற்கு தீர்வு காண்பதற்காகவும் தான் இருக்கிறது. சட்டசபையில் சிறிதும் நாகரீகமற்ற முறையில் தனி நபர் தாக்குதலை நிகழ்த்தவும் அவைக்கு சம்பந்தமே இல்லாத விஷயங்களை பேசவும் தான் ஆளும் அ.தி.மு.க.வினர் முயல்கிறார்கள். தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி தே.மு.தி.க. வினரை வம்புக்கு இழுக்கும் செயலை அ.தி.மு.க.வினர் செய்யும் போது அதற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளாகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி பேசியதற்கு சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்திவிட்டார் என கூறி தே.மு.தி.க.வினரை மேலும் பேசவிடாமல் அவை காவலரை வைத்து கூண்டோடு வெளியேற்றியும், அவர்கள் அனைவரும் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயலாகும். லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்டு நேர்மையோடு செயல்படும் தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத்தில் இருந்துதான் சஸ்பெண்ட் செய்ய முடியுமே தவிர மக்கள் மனதில் இருந்து ஒரு நாளும் இடைநீக்கம் செய்ய இயலாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.