Nano Life First time launching @ T.Nagar,Chennai    |    RISHS INTERNATIONAL SCHOOL 3'rd ANNUAL DAY 05-02-2019    |    Inaugural 64-team BOOST Chennaiyin FC Football Championship announced    |    Dr.Paul Dhinakaran's Family Wedding reception at Vanagaram    |    The 31 Plenary Assembly of the Conference of the Catholic Bishops of India    |    Champions of ALLEN Sharp Exam Felicitated in the SCORE ceremony    |    7Up And Actress Kajal Aggarwal Bring Ponneram to Chennai    |    TAPMA Plans Huge Demonstration on 13th Dec. for Withdrawal of Plastics Ban    |    ALLEN Career Institute launches study centre in Chennai    |    Ford Inaugurates Dhruvan Ford Sales and Service Facility in Chennai    |   
Total Visitors : site stats
Feb 13, 2015     |     GO BACK     |     Share
 
 
பெங்களூர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். கர்நாடகம் மாநிலம் பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் காலை புறப்பட்டு சென்றது. பெங்களூரில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் சென்றபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- கர்நாடகம் - தமிழகம் எல்லையில் ஆனைக்கல் - ஓசுருக்கு இடைப்பட்ட பகுதியில் பெங்களூர் - எர்ணாகுளம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. என்று கூறப்பட்டுள்ளது. ரெயிலின் 2 ஏசி பெட்டிகள், 2 பொதுப் பெட்டிகள் என 4 பெட்டிகள் முற்றிலும் தண்டவாளத்தை விட்டு வெளியே சென்றது. காலை 7-40 மணியளவில் இந்த விபத்து நடைபெற்று உள்ளது.. எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டதில் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 18-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு சென்றது. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். ரெயில் பெட்டிகளை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பெட்டிக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காயம் அடைந்தவர்கள் பெங்களூர் மற்றும் ஓசுர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரெயில் விபத்து சம்பவம் குறித்து 097316 66751, 080233 71166 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரெயில் பெட்டிக்குள் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது.