Udhyanithi Stalin Provides Sewing machine , Iron Box, Rice    |    ChinmayaNagar LOGU celebrates Kalaignar 97 th Birth Day    |    தமிழ்நாடு ஆட்டிறைச்சி - மாட்டிறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு- பத்திரிக்கையாளர் சந்திப்பு.    |    Chariot from Tamil Nadu for Rama Navami Celebrations at Ayodhya    |    OPS INAUGURATED FAIR PRO -2020 EXPO AT NANDAMBAKKM    |    Paytm to Empower 1 Million Merchants in Tamil Nadu    |    Lizol for the first time in India, launches a new innovative product designed specially for cement surface    |    Newgen Software extends support to 800 children through remedial education programme in Nandabakkam Higher Secondary School, Sriprembadhur, Chennai    |    திறமைக்கு வாய்ப்பளிக்கும் சமூகமே முன்னேறும்!    |    SRI CHAITANYA GROUP OF SCHOOL WORLD RECORD FEST 2019    |   
Total Visitors : site stats
Feb 5, 2015     |     GO BACK     |     Share
 
 
அரும்பாக்கத்தில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அருள்மிகு திருவீதி அம்மன் துலுக்கானத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. கோவிலில் கணபதி, முருகர், துர்க்கை, துலுக்கானத்தம்மனுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவுக்கான யாக சாலை பூஜை கடந்த 1ந்தேதி தொடங்கியது. இன்று காலை 4ம்கால யாக பூஜை நடைபெற்றது. 9.15 மணி அளவில் யாக குண்டத்தில் இருந்து கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. முதலில் திருவீதி அம்மன், கணபதி, முருகன், துர்க்கை சன்னதி விமானங்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. 9.30 மணி அளவில் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு மகாஅபிஷேகம் நடந்தது. 9.45 மணிக்கு திருவீதி அம்மன், துலுக்கானத்தம்மன் விமானங்களுக்கும் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கும் அபிஷேகம் நடந்தது. திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், அம்பத்தூர் யோகா மாயா புவனேஸ்வர பீடாபதி ஜகத்குரு பரமஹம்ச ஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள் ஆகியோர் தலைமையில் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார், பாலாஜி சிவாச்சாரியார் ஆகியோர் கும்பாபிஷேகத்தை முன் நின்று நடத்தினார்கள். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் மீது கலச தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பகுதி செயலாளர் ஏ.இ.வெங்க டேசன், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. செல்வ பெருந்தகை, மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம், சிரஞ்சீவி மற்றும் கதிரவன், வில்சன், முருகன், பாஸ்கர், ஆனந்தன் உள்பட பல பிரமுகர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை திருவீதி அம்மன் கோவில் வழிபாட்டு வளர்ச்சி சங்க தலைவர் ஜெயக்குமார், செயலாளர் வீரபாண்டியன், பொருளாளர் குசேலர், துணைத் தலைவர் ரட்சகர் ஆகியோர் செய்தனர்.