NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |    Nano Life First time launching @ T.Nagar,Chennai    |    RISHS INTERNATIONAL SCHOOL 3'rd ANNUAL DAY 05-02-2019    |    Inaugural 64-team BOOST Chennaiyin FC Football Championship announced    |    Dr.Paul Dhinakaran's Family Wedding reception at Vanagaram    |    The 31 Plenary Assembly of the Conference of the Catholic Bishops of India    |    Champions of ALLEN Sharp Exam Felicitated in the SCORE ceremony    |    7Up And Actress Kajal Aggarwal Bring Ponneram to Chennai    |   
Total Visitors : site stats
Feb 4, 2015     |     GO BACK     |     Share
 
 
ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார். இது குறித்து தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 9-ந் தேதி மாலை 4 மணி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் ஒன்றியம் பகுதியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். மாலை 4.15 மணியளவில் சோமரசம்பேட்டையில் பிரசாரத்தை தொடங்கும் அவர், அதவத்தூர் மெயின் வீதி, அல்லித்துறை அண்ணா சிலை, தீரன் நகர், புங்கனூர், ராம்ஜி நகர் மில்கேட், கள்ளிக்குடி, சோழன் நகர், நவலூர் குட்டப்பட்டு (கலைஞர் திடல்). சத்திரப்பட்டி, அம்மாப்பேட்டை, இனாம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், மணப்பாறை ஒன்றியம், சித்தா நத்தம், வடக்கு சேர்ப்பட்டி, கொட்டப்பட்டி, கரும்புளிப்பட்டி, பொத்த மேட்டுப்பட்டி, முத்தப்புடையான்பட்டி, சமுத்திரம், மறவனூரில் அவர் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். வீதி, வீதியாக... 10-ந் தேதி மாலை 4.15 மணிக்கு அந்தநல்லூர் ஒன்றியம் பகுதிகளில் அவர் வீதி, வீதியாக பிரசாரம் மேற்கொள்கிறார். கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர் பேருந்து நிலையம், அல்லூர், ஜீயபுரம், கொடியாளம் கேட், திருப்பராய்த்துறை, பெருகமணி, சிறுகமணி, பெட்டவாய்த்தலை, கருப்பூர், குழுமணி, கோப்பு, எட்டரை, வியாழன் மேடு, கொய்யாத்தோப்பு ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். 11-ந் தேதி காலை 9 மணிக்கு கிளிக்கூடு பகுதியில் அவர் பிரசாரத்தை தொடங்குகிறார். உத்தமர்சீலி, பனையபுரம், திருவளர்சோலை, தாகூர் தெரு, கன்னிமார்தோப்பு, கீழ கொண்டையம்பேட்டை, ஒத்ததெரு, சன்னதி வீதி, மேலகொண்டயம்பேட்டை, நடுகொண்டயம் பேட்டை, டிரங்ரோடு திருவானைக்கோவில், செக்போஸ்ட், அம்பேத்கார் நகர். பொதுக்கூட்டம் நெல்சன் ரோடு, தேவி தியேட்டர், வீரேஸ்வரம் நால்ரோடு, கீதாபுரம், ராகவேந்திரா ஆர்ச், மூலத்தோப்பு, மேலூர்-தெப்பக்குளத்தெரு, மேலவாசல், வடக்கு வாசல், தெற்கு வாசல் ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். மாலை 3.30 மணிக்கு ராஜகோபுரம் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.