TAPMA Plans Huge Demonstration on 13th Dec. for Withdrawal of Plastics Ban    |    ALLEN Career Institute launches study centre in Chennai    |    Ford Inaugurates Dhruvan Ford Sales and Service Facility in Chennai    |    Chartered Accountant Training Program by Education Department    |    Stroke Awareness Walkathon by SIMS Hospital    |    Bonfiglioli Sets Up a New Facility in Chennai    |    United India Insurance - MEGA INSURANCE ADVISORS MEET AT CHENNAI ON 28/08/2018    |    Vishal 3R Lab innaugurated by Seema Agarwal IPS    |    CII and Grundfos Inaugurate GangaiAmman Koil Kulam (Tank)    |    TUTUCORIN CONTRACTORS ASSOCIATION PRESS MEET REGARDING STERILITE    |   
Total Visitors : site stats
Feb 5, 2015     |     GO BACK     |     Share
 
 
ஸ்ரீரங்கம் தொகுதி முழுவதும் மக்களிடம் ஜெயலலிதா செய்த சாதனைகள் அடங்கிய பட்டியல், வேண்டுகோளுடன் கூடிய 14 பக்க புத்தகத்தை அமைச்சர்கள், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், அண்ணா தி.மு.க.வினர் வீடு வீடாக சென்று கொடுத்து வாக்கு கேட்டு வருகிறார்கள். உங்கள் இல்லம்தோறும் நானே நேரில் வந்து உங்களிடம் வாக்கு கேட்பதாக கருதி இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா அந்த வேண்டுகோள் கடிதத்தில் கூறியுள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதி மக்களாகிய உங்களுக்கு என் மனதில் எப்போதும் தனி இடம் உண்டு என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். உங்கள் அன்பும் பற்றும் என்னுடன் பின்னி பிணைந்துள்ள பாசத்தையும் இந்த இடைத்தேர்தலால் எள்ளளவும் குறைந்திட இயலாது. நமக்குள்ளே உள்ள பந்தம் இன்னும் மேன்மை அடைய இது வழிவகுக்கும் என்றும் ஜெயலலிதா அந்த வேண்டுகோள் கடிதத்தில் கூறியுள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன். எஞ்சிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தி.மு.க.வுக்கும் மற்றவர்களுக்கும் வாக்களிப்பதால் உங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார். 14 பக்க சாதனை, வேண்டுகோள் அறிக்கையின் இறுதியில் உங்கள் அன்புச் சகோதரி என்று ஜெயலலிதா கையெழுத்திட்டிருக்கிறார். நேற்று மாலை முதல் ஜெயலலிதா வெளியிட்டுள்ள 14 பக்க அறிக்கை புத்தகத்தை ஸ்ரீரங்கம் தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கொடுத்து வாக்கு கேட்டு வருகிறார்கள்.