Nano Life First time launching @ T.Nagar,Chennai    |    RISHS INTERNATIONAL SCHOOL 3'rd ANNUAL DAY 05-02-2019    |    Inaugural 64-team BOOST Chennaiyin FC Football Championship announced    |    Dr.Paul Dhinakaran's Family Wedding reception at Vanagaram    |    The 31 Plenary Assembly of the Conference of the Catholic Bishops of India    |    Champions of ALLEN Sharp Exam Felicitated in the SCORE ceremony    |    7Up And Actress Kajal Aggarwal Bring Ponneram to Chennai    |    TAPMA Plans Huge Demonstration on 13th Dec. for Withdrawal of Plastics Ban    |    ALLEN Career Institute launches study centre in Chennai    |    Ford Inaugurates Dhruvan Ford Sales and Service Facility in Chennai    |   
Total Visitors : site stats
Feb 3, 2015     |     GO BACK     |     Share
 
 
தேசிய விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவில் இசை நிகழ்ச்சி நடத்த வாங்கிய ரூ. 1 கோடி 63 லட்சத்தை திருப்பி தந்து எதிர்ப்புகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முடிவு செய்துள்ளார் நடிகர் மோகன் லால்.கேரளாவில் தேசிய விளையாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதன் தொடக்கவிழாவில் இசை நிகழ்ச்சி நடத்த மோகன்லாலின் லாலிசம் இசைக்குழு பொறுப்பு ஏற்றது. இதற்காக அவர் ரூ 2 கோடி பெற்றதாக விமர்சனம் எழுந்தது. மலையாள பட இயக்குனர் வினயன் இதுகுறித்து கூறும்போது,சச்சின் டெண்டுல்கர் இலவசமாக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஆனால் மோகன்லால் ரூ.2 கோடி கட்டணம் பெறுவது ஏற்கத்தக்கதல்ல என்றார். இதையடுத்து மோகன்லால் மீது இணைய தள பக்கங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து மோகன்லால் தரப்பில் விளக்கம் அளித்தபோது, இசைக் குழுவில் பிரபல பாடகர்கள், இசை கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். அவர்கள் தங்குவதற்கும், பயணத்திற்குமான செலவுக்காகத்தான் கட்டணம் பெறப்படுவதாக கூறப்பட்டது. ஆனாலும் மோகன் லால் மீதான விமர்சனம் அடங்கியபாடில்லை. இந்நிலையில் மோகன்லால் கேரள அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:கடுமையான விமர்சனங்கள் என் மனதை காயப்படுத்தி விட்டன. அதற்கு முற்றுபுள்ளி வைக்க விரும்புகிறேன். இசை கச்சேரிக்காக பெறப்பட்ட 1 கோடி 63 லட்சத்து 77 ஆயிரத்து 600 ரூபாயை நான் திருப்பி தர தயாராக இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் இசை குழுவினர் நடத்திய நிகழ்ச்சியும் திருப்திகரமாக இல்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.