Stroke Awareness Walkathon by SIMS Hospital    |    Bonfiglioli Sets Up a New Facility in Chennai    |    United India Insurance - MEGA INSURANCE ADVISORS MEET AT CHENNAI ON 28/08/2018    |    Vishal 3R Lab innaugurated by Seema Agarwal IPS    |    CII and Grundfos Inaugurate GangaiAmman Koil Kulam (Tank)    |    TUTUCORIN CONTRACTORS ASSOCIATION PRESS MEET REGARDING STERILITE    |    சிறந்த திட்டமிடல் இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும்: வருமான வரித் துறை ஆணையர்    |    IndoStar Capital Finance Limited Offer opens on May 9, 2018    |    Catalyst PR - Receive ISO Certification    |    UBM India announces the maiden edition of The Chennai Jewellery and Gem Fair    |   
Total Visitors : site stats
Feb 3, 2015     |     GO BACK     |     Share
 
 
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள கிராம காவல் தெய்வமான முத்துமாரியம்மன் கோவில் மற்றும் 81 அடி உயரமுள்ள பிரமாண்ட ராஜகோபுரம், பரிவார தெய்வங்களுக்கு திருப்பணி முடிவடைந்து நேற்று காலை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவிற்கு வந்த பக்தர்களை கொத்த மங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்குழு தலைவர் பாண்டியன் தலைமை யில் விழாக்குழுவினர் வரவேற்றனர். ஹெலிகாப்டரில் இருந்து... கும்பாபிஷேகத்தை முன் னிட்டு கலசங்களுக்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட் டதும், ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹெலிகாப்டரில் இருந்து ராஜகோபுரம் மற்றும் கோவிலின் மேலே வட்டமிட்டு மலர் தூவப்பட்டது. தொடர்ந்து புனித நீரும் தெளிக்கப்பட்டது. புனித நீர் தெளிக்க சுழல் குழாய்கள் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. திருவிழாவிற்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து சுமார் 10 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.திரளான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண திரண்டிருந்தனர். மேலும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நின்றன. சிறப்பு மருத்துவ முகாமும் அமைக் கப்பட்டிருந்தது. அன்னதானம் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்த அன்னதானம் நான்கு பக்கங்களிலும் வழங்கப் பட்டது. திருவிழா ஏற்பாடுகளை கொத்த மங்கலம் முத்துமாரியம்மன் கோவில் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். கீரமங்கலம் போலீசார் பாதுகாப்பு எற்பாடுகளை செய் திருந்தனர். விழாவில் மக்கள் நல்வாழ் வுத் துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், உயர்நீதிமன்ற நீதிபதி செல்வம், முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் விஸ்வநாதன், திரைப்பட நடிகர் ஆர்.வி.பரதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.