NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |    Nano Life First time launching @ T.Nagar,Chennai    |    RISHS INTERNATIONAL SCHOOL 3'rd ANNUAL DAY 05-02-2019    |    Inaugural 64-team BOOST Chennaiyin FC Football Championship announced    |    Dr.Paul Dhinakaran's Family Wedding reception at Vanagaram    |    The 31 Plenary Assembly of the Conference of the Catholic Bishops of India    |    Champions of ALLEN Sharp Exam Felicitated in the SCORE ceremony    |    7Up And Actress Kajal Aggarwal Bring Ponneram to Chennai    |   
Total Visitors : site stats
Feb 1, 2015     |     GO BACK     |     Share
 
 
காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெயந்தி நடராஜன் விலகியதோடு, ராகுல் காந்தி மீது பரபரப்பு குற்றச்சாட்டையும் கூறி இருந்தார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு காங்கிரஸ் மேலிடம் திடீர் அழைப்பு விடுத்துள்ளது. அவர் இன்று காலை டெல்லிக்கு விரைந்துள்ளார். தமிழக காங்கிரசில் இருந்து ஜி.கே.வாசன் வெளியேறினார். இதற்கிடையே புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமிக்கப்பட்டார். அவருக்கு ப.சிதம்பரம் தரப்பு ஒத்துழைப்பு அளிக்காதது அதிர்ச்சியை தந்தது. மேலும், ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம், காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கண்டித்தார். இது குறித்து ப.சிதம்பரம் தரப்பு மேலிடத்தில் புகார் செய்தது. ஆனாலும், அந்த புகார் குறித்து மேலிடம் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ப.சிதம்பரம் தரப்புக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் தனது ஆதரவாளர்களை அழைத்து தனி கூட்டம் நடத்தினார். இதில், கடுப்பான இளங்கோவன் அவரை கட்சியை விட்டு நீக்குவது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அதற்கு பதிலளிக்க ஒருவார கெடுவும் விதித்தார். இதற்கு பதில் கடிதம் அனுப்பிய கார்த்திக் சிதம்பரம் என்னிடம் நீங்கள் விளக்கம் கேட்க முடியாது. காங்கிரஸ் மேலிடம் மட்டுமே என்னிடம் கேள்வி கேட்க முடியும் என கடிதம் கொடுத்தார். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் முன்னாள் மத்தியமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் மேலிடம் தன்னை முற்றிலும் ஓரம் கட்டியது என்றும் ராகுல் காந்தி மீதும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி கட்சியில் இருந்து வெளியேறினார். அவர் விலகியது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயந்தி நடராஜன் கட்சியை விட்டு வெளியேறியதால் கட்சிக்கு ஒளிமயமான எதிர்காலம் ஏற்பட்டுள்ளது என்றும், அதேபோல, இன்னொருவர் தனது மகனுடன் கட்சியை விட்டு வெளியேறினால் காங்கிரஸ் கட்சிக்கு விமோசனம் ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தார். வாரிசுடன் இன்னொருவர் என்று அவர் தெரிவித்தது ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தைதான் என்று காங்கிரசார் மத்தியில் பேசப்பட்டது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இந்த கருத்து ப.சிதம்பரம் தரப்பினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டெல்லியில் இருக்கும் ப.சிதம்பரம், இளங்கோவனின் கருத்து தொடர்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. கட்சியில் இருக்கும் போதே ஒருவரை வெளியேற எப்படி கூறலாம் என்று மூத்த தலைவர்களும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இதையடுத்து, சோனியாகாந்தி இளங்கோவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு விளக்கம் அளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், வாரிசுடன் வெளியேற வேண்டும் என்று கூறியது ப.சிதம்பரத்தை அல்ல என்றும், தான் யாரின் பெயரையும் குறிப்பிடாமல் தான் கூறினேன் என்றும் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று கோவையில் இருந்து சென்னை திரும்பிய இளங்கோவன், இன்று காலை 6.15 மணிக்கு காங்கிரஸ் மேலிட அழைப்பை தொடர்ந்து அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். ஏற்கனவே, ப.சிதம்பரம் மற்றும் முக்கிய தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைவராக நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் டெல்லி மேலிடத்தின் இந்த திடீர் அழைப்பு இளங்கோவனுக்கு சிக்கலை ஏற்படுத்துமா?, அல்லது அவர் எடுத்துவரும் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்குமா? என்பது காங்கிரசார் மத்தியில் பரபரப்பையும் எதிர்பார்பையும் ஏற்படுத்தியுள்ளது.