சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
Sep 30, 2014     |     GO BACK     |     Share
 
 
சென்னை, செப்:30 அப்பல்லோ மருத்துவமனைகள் மற்றும் ஸேனோஃபி இணைந்து இந்தியாவில் ஒருங்கிணைந்த டயாபடிக் பாதுகாப்புத் திட்டங்களை வழங்கி வரும் அப்பல்லோ சுகர் கிளினிக்குகளை தங்களின் கூட்டு முயற்சியின் மூலம் விரிவுபடுத்தும் திட்டத்தை அறிவித்தன. அப்பல்லோ மற்றும் ஸேனோஃபி டயாபடீஸில் தங்களுக்கு உள்ள நிபுணத்துவத்தின் மூலம் விரிவான கல்வி ஆதாரங்கள்,சிகிச்சை மற்றும் பாதுகாப்புத் திட்டங்களை வழங்கி நோயாளிகள் தங்கள் டயாபடீஸை நல்லமுறையில் கட்டுப்படுத்த இந்தக் கூட்டு முயற்சியின் மூலமாக உதவ வேண்டுமென்று திட்டமிட்டுள்ளன. இந்தக் கூட்டு முயற்சியின் முதல்படியாக 50 சுகர் கிளினிக்குகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் நேரும் 36 மில்லியன் இறப்புகளில் 80% தொற்றாத தன்மையுள்ள நோய்களால்(NCDs) ஏற்படுகின்றன[i]. மேலும் தொற்றாத தன்மையுள்ள நோய்களால்(NCDs) 2012-2030 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய பொருளாதாரச் சுமை 6 ட்ரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது[ii]. NCDக்களில் முதலிடம் வகிக்கும் டயாபடீஸ், உலகம் முழுவதும் 382 மில்லியன் மக்களையும் இந்தியாவில் 65 மில்லியன் மக்களையும் பாதித்திருக்கிறது[iii]. இந்தியாவில் மட்டும் 77.2 மில்லியன் மக்கள் டயாபடீஸுக்கு முந்தைய நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது[iv]. வரும் 2035க்குள் இந்தியாவில் டயாபடீஸ் உள்ள மக்களின் எண்ணிக்கை109 மில்லியனாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது[iii]. பெருகிவரும் டயாபடீஸைக் கட்டுப்படுத்தும் ஒட்டுமொத்த முயற்சிகளில்-உலக அளவிலும் இந்தியாவிலும்,அப்பல்லோ சுகர் கிளினிக்குகள் நோயில்லா டயாபடீஸ் உருவாக்கும் முயற்சியின் மூலமாகஒருங்கிணைந்த டயாபடீஸ் பாதுகாப்பு வழிமுறையை மருத்துவ உள்கட்டமைப்புடன் பெறச்செய்து,தொடக்கநிலையிலேயே டயாபடீஸை அறிவதுடன் டயாபடீஸ் மற்றும் அது தொடர்பான சிக்கல்களுக்கும்சிகிச்சை அளித்து, வாழ்க்கைமுறை நிர்வாகம் மற்றும் நடத்தை மாற்றம் போன்ற அம்சங்கள் கொண்ட திட்டங்களையும் வழங்குகின்றன. இவை எல்லாம் ஒன்றிணைந்து அவசியமான சிகிச்சைகளுடன் ஒரு சிறப்பான இணக்கநிலையை ஏற்படுத்தி நோயாளிகள் சிறந்த முன்னேற்றமடைய உதவுகின்றன. இந்த இணைந்த செயல்பாடு குறித்து, அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர். பிரதாப் ரெட்டி பேசும்போது, பல ஆண்டுகளாக, அப்பல்லோ மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்ட தரம் மற்றும் நெறிமுறைகளுக்கு உடன்பட்டு உலக அளவில் சிறந்த மருத்துவ சேவை அளிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறது. நம்முடைய சமூகத்தில் பெருஞ்சுமையாக டயாபடீஸ் அதிகரித்து வரும் வேளையில் நாம் இந்த நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் விரைந்து செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அப்பல்லோ சுகர் கிளினிக்குகள் நோயாளிகளுக்கு மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் ஆலோசனைகளை அளித்து அவர்கள் நிலையை சிறப்பாக நிர்வகிக்க உதவிடும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்தியாவில் டயாபடீஸ் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு இது ஒரு நல்ல தொடக்கம். டயாபடீஸ் நிர்வாகத்தில் உலகளவில் முன்னோடியான ஸேனோஃபியுடன் இணைவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். எங்களின் இணைந்த இலட்சியத்தின் மூலம் டயாபடீஸ் பாதுகாப்புக்கு ஒரு புது வடிவம் கிடைப்பதுடன் இந்தியாவிலும் உலக அளவிலும் நோயாளிகள் பலனடைவார்கள். டயாபடீஸுக்கு சிகிச்சை முறைகளை உருவாக்குவதிலும் பிராந்திய நிபுணத்துவம் மற்றும் நவீன பாதுகாப்பு முறைகளின் மூலம் நோயாளிகள் தங்கள் டயாபடீஸை நிர்வகிக்க உதவுவதிலும் ஸேனோஃபி கிட்டத்தட்ட100 ஆண்டுகள் சரித்திரம் கொண்டது என்று ஸேனோஃபியின் முதன்மை நிர்வாக அலுவலரானகிறிஸ்டோபர் ஏ. வியபாக்கர் தெரிவித்தார். மேலும் அவர், அப்பல்லோ சுகர் கிளினிக்குகளை விரிவுபடுத்துவதற்காக எடுக்கப்படும் இந்தக் கூட்டு முயற்சியில் டயாபடீஸ் நோயின் சுமையைக் குறைத்து நோய்ப் பாதுகாப்பின் பல்வேறு கட்டங்களில் ஆதரவளித்து உயர்தர சிகிச்சை அனுபவத்தை நோயாளிகளுக்கு அளிக்க வேண்டுமென்ற உயர்ந்த கொள்கையை ஸேனோஃபி மற்றும் அப்பல்லோ இணைந்து செயல்படுத்தும்என்றார். இந்தியாவில் டயாபடீஸ் உள்ள மக்கள் தொகையின் அளவு மிக அதிகமாக இருக்கும் அதே நேரத்தில், பல நோயாளிகள் தங்கள் நிலை குறித்து அறியாதவர்களாகவோ அல்லது உரிய கட்டுப்பாடு இல்லாதவர்களாகவோ இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய முறையில் நோயைப்பற்றிய சிறந்த விழிப்புணர்வு, அதன் சிக்கல்கள், நிர்வாகம் செய்யும் முறை, நவீன சிகிச்சை பெறும் வாய்ப்புகள் ஆகியவை அவசியம் தேவை. இது குறித்து அப்பல்லோ மருத்துவமனைகளின் அப்பல்லோ சுகர் பிரிவின் தலைவரும் இணை நிர்வாக இயக்குனருமான சங்கீதா ரெட்டி குறிப்பிடும்போது, அமெரிக்கன் டயாபடீஸ் அசோஸியேஷனில் பங்களித்து டயாபடீஸ் நிர்வாகத்தில் கிளினிக்கல் முடிவுகளை அளிப்பதில் இந்தியாவில் முதல் முறையாக அப்பல்லோ வெற்றியும் அங்கீகாரமும் பெற்றுள்ளது. இருப்பினும், ஒரு நாடாக நாம் உலக டயாபடீஸின் தலைநகரம் என்று குறிப்பிடப்படுவதை மாற்றிட போராட வேண்டியிருக்கிறது. தங்களுக்கு டயாபடீஸ் இருக்கிறது அதனால் தங்கள் வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமே நோயாளிகளுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆகவே, நோயாளிகள் சரியான சிகிச்சையும் ஆலோசனையும் பெறுவதும் டயாபடீஸை நிர்வகித்துக் கட்டுக்குள் வைக்க முடியும் என்பதை உணரச் செய்வதே எங்கள் நோக்கம். அப்பல்லோ சுகர் கிளினிக்குகளில், ஒரு நோயாளிக்குத் தேவையான தகவல்கள், இணை-நோய் அபாயங்கள் தவிர்த்தல்,ஆலோசனை, பாதுகாப்பு மற்றும் சிகிச்சை ஆகியவை பெற்றுக் கொள்ள முடியும். இதனால் மாற்றத்தை எளிதில் கடக்க முடியும். அப்பல்லோவின் விரிவான சேவைகளை இந்தியாவின் மற்ற பல பகுதிகளுக்கும் கொண்டு செல்ல விரும்புகிறோம். முதன்மை மற்றும் இரண்டாம்நிலை சுகாதாரப் பாதுகாப்பில் அப்பல்லோவின் வலிமை வாய்ந்த பிரிவான அப்பல்லோ ஹெல்த் & லைப்ஸ்டைலின் ஒரு அங்கமாக அப்பல்லோ சுகர் இருக்கும். அப்பல்லோ சுகரின்,முதன்மைச் செயல் அலுவலரான காகன் பாலா அவர்கள் நிறைவாகப் பேசும்போது, இந்தியாவின் நகர்ப்புறத்தில் டயாபடீஸ் உள்ள ஒருவர் ஆண்டுக்குச் சராசரியாக ரூ. 30,000 வரை சிகிச்சைக்காக செலவழிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், காலந்தாழ்த்திய பின் நோயைக் கண்டறிவது 10 முதல்18 மடங்கு வரை செலவை அதிகரிக்கிறது-இத்தகைய அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கைகள் குறிப்பிடத்தக்க அளவில் பொருளாதாரத்தை உறிஞ்சுவதோடு பல குடும்பங்களைக் கடன்சுமையில் தள்ளிவிடும். அப்பல்லோ சுகரில், விரிவான 360-டிகிரி நோயாளி வாழ்க்கைமுறை நிர்வாகத் திட்டத்துடன் கூடிய சிறந்த கிளினிக்கல் பாதுகாப்பு, வசதியான இடங்களில் அமைக்கப்பட்ட மையங்களில் வழங்கப்படுவதால், நோயாளிகள் தங்கள் டயாபடீஸை நன்கு திறம்பட நிர்வகித்து நோயில்லா வாழ்க்கை முறையை வாழ முடியும் என்றார். அப்பல்லோவைப் பற்றி 1983 இல் இந்திய சுகாதாரத்துறையின் சிற்பியான டாக்டர். பிரதாப் ஸி ரெட்டி, இந்தியாவின் முதல் கார்ப்பரேட் மருத்துவமனையான சென்னை அப்பல்லோ மருத்துவமனையைத் தொடங்கினார். கடந்த பல ஆண்டுகளில் அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதார நிறுவனங்களில் ஒன்றாக, 50மருத்துவமனைகளில் 8,500 படுக்கைகள், 1350 க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பரிசோதனைக் கிளினிக்குகள் என்று வளர்ச்சி கண்டுள்ளது. இந்தக் குழுமம் மருத்துவ வணிக செயல்முறைகளை மற்ற நிறுவனங்களுக்குச் சேவையாக வழங்குவதோடு, காப்பீடு சேவைகள் மற்றும் கிளினிக்கல் ஆய்வுப் பிரிவுகள் போன்ற சேவைகளையும் தொற்றுநோய் ஆய்வுகள், ஸ்டெம் செல் ஆராய்ச்சி மற்றும் மரபணு ஆராய்ச்சி ஆகிய பிரிவுகளில் வழங்குகிறது. சிறந்த சுகாதாரச் சேவைக்கான தேவைகள் வளர்ந்து வருவதால் அதற்குத் தேவையான திறமைகளை வளர்க்க அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் 11 நர்ஸிங் மற்றும் மருத்துவமனை மேலாண்மைக் கல்லூரிகளையும் நடத்துகிறது. இந்தச் சாதனைகளினால் அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் இந்திய அரசிடமிருந்து சிறந்த மைய விருது மற்றும் ஜாயின்ட் கமிஷன் இன்டர்நேஷனல் அங்கீகாரம் உட்பட பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது(எங்கள் 7 மருத்துவமனைகள் JCI அங்கீகாரம் பெற்றவை). மரியாதைக்கெல்லாம் மகுடமாக, இந்திய அரசு,சுகாதார நிறுவனங்களில் முதல் முறையாக அப்பல்லோவின் சேவைக்காக ஒரு நினைவு அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர், டாக்டர். பிரதாப் ஸி ரெட்டி, 2010 இல் மதிப்புக்குரிய பத்மவிபூஷன் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம், கடந்த 30ஆண்டுகளில் மருத்துவக் கண்டுபிடிப்புகள், உலகத்தர மருத்துவ சேவைகள் மற்றும் நவீனத் தொழில்நுட்பத்திலும் முதன்மை வகித்து வருகிறது. உலக அளவில் சிறந்த மருத்துவ சேவை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் எங்கள் மருத்துவமனைகள் சிறந்த இடங்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. ஸேனோஃபி பற்றி ஸேனோஃபி ஒரு உலகளவில் முன்னணி வகிக்கும் ஒருங்கிணைந்த சுகாதார நிறுவனம் ஆகும். நோயாளிகளின் தேவைகளைக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சைத் தீர்வுகளைக் கண்டுபிடித்து உருவாக்கி வழங்கி வருகிறது. சுகாதாரத் துறையில் ஸேனோஃபி ஏழு வளர்ச்சிப் படிநிலைகளில் முதன்மைப் பலம் கொண்டது: டயாபடீஸ் தீர்வுகள், மனிதத் தடுப்பூசிகள், நவீன மருந்துகள், நுகர்வோர் சுகாதாரம், வளரும் சந்தைகள், விலங்குகள் நலம் மற்றும் புதிய ஜென்சைம் ஆகியவை. ஸேனோஃபி நிறுவனம் பாரிஸ் (EURONEXT: SAN)மற்றும் நியூயார்க்கில்(NYSE: SNY) பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஆகும்.