சர்வதேச சுகாதார - தொழில்நுட்ப மாநாடு CAHOTECH 2019    |    INDIA’S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI ON 6th, 7th & 8th SEPTEMBER 2019    |    KAVERI HOSPITAL INDIA'S LARGEST TAVR MEETING HELD AT CHENNAI    |    அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- 100 நபர்களுக்கு முற்றிலும் இலவசமாக கண் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்    |    TVS Srichakra Ltd Launches Brand TVS Eurogrip: Aimed At Millennials    |    Annual Book Distribution    |    JBAS College Alumnae Reunion 2019    |    NALLI FASHIONS – THE NEW DESTINATION STORE FOR SILK SAREES AND GOLD JEWELLERY    |    Bringing cutting-edge experiences to more fans with the first ever Nokia 4.2    |    Advanced Hair Studio celebrates 10 years of success with brand ambassador Sourav Ganguly    |   
Total Visitors : site stats
Jul 13, 2014     |     GO BACK     |     Share
 
 
முகலாய் ஸ்டைல் மட்டன் குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! முகலாய் ஸ்டைல் மட்டன் குருமா தேவையான பொருட்கள்: மட்டன் - 500 கிராம் (சுத்தமாக நீரில் கழுவியது) வெங்காயம் - 2 (அரைத்தது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் தயிர் - 1/4 கப் க்ரீம் - 1/4 கப் கோவா - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது) சுண்ட காய்ச்சிய பால் - 1/4 கப் ஜாதிக்காய் பொடி - 1 சிட்டிகை ஜாதிபத்திரி பவுடர் - 1 சிட்டிகை மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எணணெய் - 4 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காய பேஸ்ட் சேர்த்து 5-6 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து 8-10 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும். பின்பு தயிரை நன்கு அடித்து அத்துடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு அதில் மிளகாய் தூள், உப்பு, க்ரீம், கோவா மற்றும் சுண்ட வைத்த பாலை ஊற்றி கிளறி, 5-6 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 20-30 நிமிடம் மட்டனை நன்கு வேக வைக்க வேண்டும். மட்டனானது நன்கு வெந்ததும், அதில் ஜாதிக்காய் பொடி மற்றும் ஜாதிபத்திரி பவுடர் தூவி கிளறி இறக்கினால், முகலாய் ஸ்டைல் மட்டன் குருமா ரெடி!