தமிழ்நாடு ஆட்டிறைச்சி - மாட்டிறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு- பத்திரிக்கையாளர் சந்திப்பு.    |    Chariot from Tamil Nadu for Rama Navami Celebrations at Ayodhya    |    OPS INAUGURATED FAIR PRO -2020 EXPO AT NANDAMBAKKM    |    Paytm to Empower 1 Million Merchants in Tamil Nadu    |    Lizol for the first time in India, launches a new innovative product designed specially for cement surface    |    Newgen Software extends support to 800 children through remedial education programme in Nandabakkam Higher Secondary School, Sriprembadhur, Chennai    |    திறமைக்கு வாய்ப்பளிக்கும் சமூகமே முன்னேறும்!    |    SRI CHAITANYA GROUP OF SCHOOL WORLD RECORD FEST 2019    |    GADGET FREE DAY CAMPAIGN WITH 100 TWINS HELD AT VELAMMAL    |    AMSTRAD - The next generation consumer electronics brand launches in Tamil Nadu    |   
Total Visitors : site stats
Jan 2, 2014     |     GO BACK     |     Share
 
 
சமையலில் செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை சமையலில் செய்ய செய்யக்கூடாதவை... * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. * சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. * தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.(வெங்காயத்தை முதலில் வதக்கி பிறகு அதன் கூட தக்காளியை சேர்த்து வதக்கவும்.இல்லையேல் வெங்காயம் சரியாக வதங்காது...) * பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. * பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. * தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. * குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது. * குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. ....செய்ய வேண்டியவை.... * மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும். * புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும். * ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும். * போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும். *குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும். * பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும். * குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும். * வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும். * கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும். *வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.